'இன்ஜீனியரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி’... ‘இனி அவங்க, அவங்க தாய்மொழியிலேயே’... ‘மத்திய அரசின் புதிய அறிவிப்பு’...!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாவரும் கல்வியாண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன், அத்துறையின் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்விகளை, அவரவர் தாய்மொழியில் கற்கும் வகையில், அடுத்த கல்வியாண்டு முதல் (2021-2022), நடைமுறைப்படுத்தப்படுவதற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன.
தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வியை வழங்க சில குறிப்பிட்ட ஐ.ஐ.டி. (IITs) மற்றும் என்.ஐ.டி.கள் (NITs) தேர்வு செய்யப்பட்டுள்ளன. புதிய கல்விக் கொள்கையின்படி (new National Education Policy -NEP) இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.
முதல்கட்டமாக ஐஐடி பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (IIT BHU) பொறியியல் கல்வி இந்தி மொழியில் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும் சில ஐஐடி, என்ஐடி, மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (IIT, NIT, All India Council for Technical Education (AICTE)) ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளிடம் ஆலோசனைக் கேட்டு அறிந்தப் பிறகு, மற்ற இடங்களில் தாய்மொழியில் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்விகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் பொது நுழைவுத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (NTA), ஜேஇஇ (JEE) உள்ளிட்ட தேர்வுகளில், அதிகளவில் தாய்மொழிகளில் புதிய வினாத்தாள்களை உருவாக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்!" - முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!.. 'திமுக'வுக்கு பதிலடி!
- மருத்துவ படிப்பு சேர்க்கையில் 'புதிய உள்ஒதுக்கீடு' அறிமுகம்!.. மத்திய அரசு அதிரடி!. வெளியான பரபரப்பு தகவல்!.. முழு விவரம் உள்ளே!
- ‘கல்லூரி மாணவர்களின்’... ‘அரியர் தேர்வு விவகாரத்தில்’... ‘உயர்நீதிமன்றத்தில்’... ‘யுஜிசி திட்டவட்டம்’...!!!
- அமெரிக்கப் பொருளாதாரத்தில் இந்திய மாணவர்களின் ‘அசர வைக்கும்’ பங்களிப்பு.. ஆனாலும் 16 வருஷமா அந்த நாடுதான் ‘டாப்’!
- ‘அனைத்து அரசுக் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கும்’...!!! ‘இலவச அதிவேக வைஃபை சேவை’...!!! ‘அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மாநிலம்’...!
- 19 வயசுல என் ‘அம்மா’ இங்க வந்தாங்க.. இந்த ஒரு விஷயத்தை முழுசா நம்புனாங்க.. கமலா ஹாரிஸ் உருக்கமாக சொன்ன தகவல்..!
- பள்ளிகளை திறக்கலாமா?.. வேண்டாமா?.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!.. திடீர் திருப்பம்!.. என்ன காரணம்?
- 'எந்த அனுபவமும் இல்ல!'.. 'ஒரு பக்கம் மீன் விற்பனை'.. 'இன்னொரு பக்கம் ஆன்லைன் வகுப்பு!'.. குடும்ப சூழலால் மாணவிகளின் துணிச்சல் முடிவு!
- “பையன் NEET-ல பாஸ் ஆயிட்டான்.. எப்படியாச்சும் டாக்டர் ஆக்குங்க ஐயா!”.. மெடிக்கல் சீட்டுக்கு ரூ.57 லட்சம் கொடுத்த தந்தை .. ‘பாதிரியாரும்’ கூட்டாளிகளும் செய்த ‘பலே’ காரியம்!
- “அப்போ.. புரிதல் இல்லை.. இயக்குநர் வற்புறுத்தினாரு”.. இணையத்தில் பரவும் தனது ஆபாச காட்சி.. இப்போது சட்டக் கல்லூரி மாணவியாக இருக்கும் நடிகை பரபரப்பு புகார்!