நாடு முழுவதும் '5805 நிறுவனங்கள்' போட்டாபோட்டி... முதல் இரண்டு இடங்களை பிடித்த 'தென்னிந்திய' கல்வி நிறுவனங்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்த தரவரிசை பட்டியலில் இடம் பிடிப்பதற்காக நாடு முழுவதும் இருந்து 5805 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தன.

Advertising
Advertising

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று வெளியிட்டார். இதில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. ஐஐஎஸ்சி பெங்களூரு 2-ம் இடத்தையும், டெல்லி ஐஐடி 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.

கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு வசதி, படித்து முடித்து வெளியே வரும் மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியின் தரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த தரவரிசை பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும். அந்த வகையில் 2-வது முறையாக சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இதேபோல சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடத்தை பிடித்துள்ளது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்