'இதுதான் கொண்டாட்டமா'?...'மாணவனுக்கு எமனான 'Birthday Bumps'...அதிரவைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒவ்வொரு வருடமும் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது அனைவரது வாழ்விலும் முக்கியமான ஒன்றாகும்.ஆனால் அந்த பிறந்த நாள் கொண்டாட்டம் மாணவன் ஒருவனின் உயிரை பறித்தது தான்,பலரையும் அதிரவைத்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்,அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்து 'பிறந்த நாள் கொண்டாடுவதற்கு இது சரியான முறை அல்ல.அனைவரும் சேர்ந்து,விளையாட்டாக அடிக்கிறோம் என்ற பெயரில் ஒருவரை தாக்குவது என்பது,கேளிக்கையான விஷயம் அல்ல. கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். 

இதனிடையே தெலுங்கு செய்தி நிறுவனம் ஒன்று இந்த வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருந்தது.இந்த சம்பவமானது ஐஐம் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றிருக்கிறது.பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிய மாணவனிற்கு 'Birthday Bumps' கொடுக்கிறோம் என்ற பெயரில்,பல மாணவர்கள் சேர்ந்து அந்த மாணவனை கண்மூடித்தனமாக தாக்குகிறார்கள்.அதில் அந்த மாணவன் நிலைகுலைந்து போகிறான்.அதில் வயிற்று பகுதியில் பலமாக அடிபட்ட அவனை மருத்துவமனையில் சேர்த்தும்,சிகிச்சை பலனின்றி உயிரிழக்கிறான்.

இந்நிலையில் இது போன்ற கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.கொண்டாட்டங்கள் நிச்சயமாக அடுத்தவரின் சுதந்திரத்தையும்,உயிரையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

TWITTER, BIRTHDAY BUMPS, BOY DIES, IIM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்