டாக்டர் இதுக்கு ஒரு 'ஆபரேஷன்' பண்ணனும்... நாய்க்குட்டி போல தோளில் 'தூக்கிக்கொண்டு' வந்த நபர்... மிரண்டு போன மக்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாய்க்குட்டி போல தோளில் மெகா சைஸ் ஓணானை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தார்.

கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜிதின் என்பவர் இகுவானாவை (ஒருவகை ஓணான்) செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அதன் மேல் தாடையில் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான வளர்ச்சியால் உணவு எடுத்துக்கொள்வது கடினமாக இருந்துள்ளது. இதையடுத்து தன்னுடைய செல்லப்பிராணிக்கு ஆபரேஷன் செய்ய முடிவு செய்த ஜிதின் அதனை கால்நடை மருத்துவமனைக்கு தோளில் தூக்கிக்கொண்டு வந்தார்.

இதைப்பார்த்து பொதுமக்கள் என்ன இது என்ற ரீதியில் மிரண்டு போய் பார்த்துள்ளனர். (இதனால் இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது) தொடர்ந்து அதை பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர்கள் அதற்கு அறுவை சிகிச்சை செய்து தாடையில் இருந்த அளவுக்கு அதிகமான சதையை அகற்றி இருக்கின்றனர். கேரட், கீரை, வண்ண மலர்கள், செடி ஆகியவற்றை விரும்பி உண்ணும் இகுவானா மிகுந்த புத்திசாலித்தனமாக இருக்கும் என்றும் சந்தையில் இதன் மதிப்பு லட்சம் ரூபாய் வரையில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்