"அடங்கவில்லை என்றால் துப்பாக்கிச் சூடு தான்..." "வேற வழியில்லை..." "பெட்ரோல் பங்கையும் மூடிருவோம்..." 'எச்சரிக்கை' விடுத்த 'முதலமைச்சர்' யார் 'தெரியுமா?...'
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலங்கானாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மதிக்கவில்லை என்றால் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடப்படும் என முதலமைச்சர் சந்திரசேகரராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாநில அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என மாநில முதலமைச்சர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளார். ஆனால் தெலங்கானாவில் இளைஞர்கள் பலர், இரவு பகல் என பைக் மற்றும் காரில் ஊர் சுற்றி வருகின்றனர். போலீசார் லத்தியால் அவர்களை கடுமையாக தாக்கும் காட்சிகளும், இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இருந்தபோதும், ஊரடங்கை மதிக்காமல் பலர் சுற்றித்திரிகின்றனர்.
இதனால், ஆத்திரமடைந்த சந்திரசேகர் ராவ் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காவிட்டால் போலீசாருக்கு துப்பாக்கி சூடு நடத்தும் அதிகாரம் வழங்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசாருக்கு கட்டுப்படவில்லை என்றால் துணை ராணுவப்படையை வரவழைக்கவும் தெலங்கானா அரசு தயங்காது என தெரிவித்துள்ளார்.
அதுபோன்ற நிலையை பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டாம் என்றும், அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் சந்திரசேகர் ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை மதிக்கவில்லை என்றால் பெட்ரோல் பங்க்கை மூடவேண்டியது இருக்கும் என்றும் தெலங்கானா முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஆம்புலன்ஸ்' மூலம் 'கோவைக்குள்' நுழையும் 'மக்கள்'... 'தங்களைத்' தாங்களே 'கடத்திக்' கொள்ளும் 'விநோதம்..'. "லாக் டவுனுக்கு மரியாதையே இல்லை..." 'திணறும்' அதிகாரிகள்...
- "ஹன்டா வைரஸ் என்றால் என்ன?" அதுவும் 'கொரோனாவை' போல் 'பரவக்கூடியதா?...' அதன் 'அறிகுறிகள்' என்ன?... 'முழுமையானத் தகவல்...'
- ‘ஏப்ரல் 14-ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கம்!’.. ‘காட்டுத்தீயாக பரவும் கொரோனாவால்’ பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு!
- 'கொரோனா' குறித்து 'தவறான' தகவல்களும், 'புரளிகளும்'... 'அறியாமையும்', அறிந்து கொள்ள வேண்டியதும்... 'முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்...'
- 'காய்கறி' விலையை 'இருமடங்கு' உயர்த்திய 'வியாபாரிகள்'... '15 ரூபாய்' கத்திரிகாய், 40 ரூபாய்க்கு 'விற்பனை'... 'கோயம்பேடு' மார்க்கெட்டில் குவிந்த 'மக்கள் வெள்ளம்'...
- கொரோனா' பாதித்த 'மதுரை நபர்' ஆபத்தான நிலையில் உள்ளார்... அமைச்சர் 'விஜயபாஸ்கர்' தகவல்...தமிகழத்தில் வைரஸ் 'பரவல்' அதிகரித்துள்ளதாகவும் 'விளக்கம்'...
- ஊரடங்கு உத்தரவை அலட்சியப்படுத்திய... 900 பேர் மீது வழக்குப்பதிவு!... காவல்துறை அதிரடி!
- 'தந்தையின்' 'இறுதிச்சடங்கில்' பங்கேற்க முடியாத நிலை.... 'விமானங்கள்' ரத்தானதால் 'அமெரிக்காவில்' தவித்த மகன்... 'இறுதிச்சடங்கை' வீடியோவில் பார்த்து 'கதறி அழுத'.... 'நெஞ்சை' உருக்கும் 'சோகம்'...
- 'ஒரே வாரத்துல' வேலைய 'மாத்திட்டாங்களே'... 'ஐயோ...!' 'டான்ஸ்' வேற ஆட சொல்வாங்க போல... 'ஸ்பெயினில்' மக்களை 'பாட்டு பாடி' மகிழ்விக்கும் 'போலீசார்'...
- 'வேகமாக' பரவும் 'கொரோனா' தொற்று... '2 வாரங்களில்' 20 ஆயிரமாக 'அதிகரிக்கக்' கூடும்... 'இலங்கைக்கு' மருத்தவ 'நிபுணர்கள்' எச்சரிக்கை...