சீனாவில் இருந்து வாங்கிய ‘ரேபிட் டெஸ்ட் கிட்டை’ பயன்படுத்த வேண்டாம்.. ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாசீனாவில் வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த வேண்டாம் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கி கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தற்போது உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,07,094 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,82,552 ஆகவும் உள்ளது.
அந்தவகையில் இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் கொரோனா பாதிப்பை விரைவாக கண்டறிய சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்தியா வாங்கியது. இதனிடையே ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் தவறான முடிவுகளை தருவதாக ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புகார்கள் எழுந்தன.
இதனை அடுத்து புதிதாக வந்துள்ள ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை இரண்டு நாட்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்டுக்கொண்டது. மேலும் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை பயன்படுத்துவது குறித்த அறிவுறுத்தல் விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. பின்னர் மாநில அரசுகள் கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை பயன்படுத்தலாம் என்றும், கொரோனாவை கண்டறிய பிசிஆர் டெஸ்ட் அவசியம் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் சீனாவை சேர்ந்த வோன்ஃபோ பையோடெக், லிவ்ஷான் டயக்னாஸ்டிக் (Wondfo Biotech and Livzon Diagnostic) ஆகிய நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை பயன்படுத்த வேண்டாம் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- கொரோனா விவகாரத்தில்... சர்வதேச விசாரணை நடக்குமா?.. உலக நாடுகளை மிரளவைத்த சீனாவின் 'பதில்'!.. அடுத்தது என்ன?
- தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா!.. சென்னையில் மட்டுமே 47 பேர்!.. முழு விவரம் உள்ளே!
- "யாரா இருந்தா என்ன.. வெளில வர்லாமா?".. 'ஊரடங்கில்' சொகுசு காரில் 'சிக்கிய' தொழிலதிபர் 'மகனுக்கு' தோப்புக்கரண 'தண்டனை'!
- 'தமிழக எல்லையில் நடு ரோட்டில் எழுப்பப்பட்ட சுவர்'... 'திடீரென எழுந்த பரபரப்பு'... அதிகாரிகள் விளக்கம்!
- 'ஊரடங்கில்' பொழுது போக... மனைவி கொடுத்த 'ஐடியா'... விளையாட்டு வினையாகி 'கடைசியில்' நேர்ந்த 'துயரம்'...
- 'கடல் வழியாக வந்த தாய் மற்றும் 2 மகன்கள்'... 'காட்டிக்கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர்கள்' ... சென்னை அருகே பரபரப்பு!
- 'வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!'.. கொரோனாவை வென்ற பிரதமர் போரிஸ்!.. நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியது எப்படி?
- மே 3க்குப் பிறகு என்ன செய்யலாம்?.. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? நீக்கப்படுமா?.. பிரதமருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளியான 'முக்கிய' தகவல்!
- ‘பிளாஸ்மா தெரபி மூலம்’... ‘பூரண குணமடைந்த முதல் இந்தியர்’... ‘12 நாளில் வென்டிலேட்டரில் இருந்து ஹோம் க்வாரன்டைன்’... ‘மருத்துவர்கள் சாதித்தது எப்படி?’...