இந்தியாவுக்கு பெருமிதம்!.. கொரோனா பரிசோதனையில்... Rapid test kits அறிமுகம்!.. இந்த முறை மிஸ் ஆகாது'!.. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் 'அதிரடி'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் பரிசோதனை முறையின் நீட்சியாக, முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட Rapid test கருவிகளுக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) ஒப்புதல் வழங்கியுள்ளது.

டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் Oscar Medicare என்ற நிறுவனம், Point-Of-Care(POC) rapid பரிசோதனை கருவிகளை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம், கொரோனா பரிசோதனை முடிவுகள் 20 நிமிடங்களில் தெரிந்துவிடும். மேலும், அதன் விலை, ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நாள் ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் POC rapid test கருவிகளை தயாரிக்கப்போவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் RT-PCR பரிசோதனை முறையில், முடிவுகள் வெளியாவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும். முன்னதாக, rapid test கருவிகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டபோது, அவற்றின் பரிசோதனை முடிவுகள் தவறாக இருந்ததால், அவை தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்