VIDEO: கொரோனா இருக்கா? இல்லையா?.. ‘வீட்டில் இருந்தே கண்டறியும் கருவி’.. ஐசிஎம்ஆர் அனுமதி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா இருப்பதை வீட்டில் இருந்தே கண்டறியும் கருவியை பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அனுமதி அளித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, உடலில் கொரோனா தொற்று இருப்பதை விரைவாக கண்டறியும் ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் (Rapid Antigen Test) என்ற கருவியை உருவாக்கியுள்ளது. மூக்கில் உள்ள சளி மாதிரியை எடுத்து இக்கருவி மூலம் வீட்டில் இருந்தபடியே கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்ய முடிகிறது.

ஆனாலும் இந்த பரிசோதனயை எல்லோரும் கண்மூடித்தனமாக செய்துவிடக்கூடாது என ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளோர், தொற்று உறுதி செய்யப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே இக்கருவியை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருவி மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தால், அது உறுதியாக பாசிடீவ் என்றே கருத்தப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆனால் அறிகுறிகள் இருந்து இக்கருவி மூலம் செய்யப்பட்ட பரிசோதனையில் நெகட்டீவ் என வந்தால், தற்போது செய்யப்பட்டு வரும் ஆர்டி-பிசிஆர் (RT-PCR) பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று ஐஎம்சிஆர் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த சோதனையை மேற்கொள்ள வசதியாக மொபைல் ஆப் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்