"இதுக்கெல்லாம் சீனாகிட்ட போகணுமா?".. "ஒரே மாசத்துல கண்டுபுடுச்சுட்டோம்!".. இந்திய மருத்துவர்கள் சாதனை!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் நோய் பாதிப்புக்கு எதிராக, முதல்கட்டமாக உடலில் ஒரு ஆண்டி பாதி எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான ரேப்பிட் டெஸ்ட் கருவியை புனேவில் உள்ள இந்திய வைராலஜி நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவுடன்(ஐசிஎம்ஆர்) இணைந்து தயாரித்து உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்
முன்னதாக சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட ரேப்பிட் டெஸ்ட் கருவிகள் தரம் குறைந்ததாகவும் தவறான முடிவுகளை கொடுத்ததாகவும் எழுந்த புகார்களை அடுத்து, லட்சக்கணக்கான கருவிகள் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இந்த நிலையில் அதைத்தொடர்ந்து இந்தியாவிலேயே ஆன்டிபாடி கண்டுபிடிக்கும் பணியில் இந்திய வைரலாஜி நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவும் இணைந்து ஒரே மாதத்துக்குள் ரேப்பிட் டெஸ்ட் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
இதுபற்றி வெளியான அறிக்கையில் இந்திய வைராலஜி நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவும் இணைந்து உள்நாட்டிலேயே ஐஜிஜி எலிசா டெஸ்ட் கருவியை, அதாவது கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உள்ளதா என கண்டறியக் கூடிய ஆண்டிபாடி உடலில் உருவாகி உள்ளதா என கண்டறியும் கருவியை கண்டுபிடித்துள்ளதாக மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டு, இரண்டரை மணி நேரத்தில் 90 மாதிரிகளை பரிசோதிக்க முடியும் என்றும் இதன்மூலம் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் விரைந்து செயல்பட முடியும் என்றும் கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும் என்றும் மும்பையில் உள்ள இரண்டு கொரோனா பாதிப்பு இருக்கும் இடங்களில் இந்த கருவிகள் கொண்டு பரிசோதிக்கப்பட்டதில், துல்லியமான முடிவுகள் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜைடஸ் காடிலா நிறுவனத்துடன் இணைந்து ஐசிஎம்ஆர் மிகப்பெரிய அளவில் இந்த ஆன்டிபாடி டிடெக்டர் கருவியை உற்பத்தி செய்யத் தொடங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் இந்திய மருத்துவர்களும், ஆய்வாளர்களும் களத்தில் இறங்கி ஒரே மாதத்தில் உள்நாட்டிலேயே இப்படி ஒரு வலிமை மிகுந்த ரேப்பிட் கருவியை தயாரிக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சிறப்பாக கையாண்டு’... ‘கொரோனாவை ஓடவிட்ட 5 மாநிலங்கள்’... ‘அவுங்ககிட்ட இருந்து பாடம் கத்துக்கனும்’...
- '3 வருஷ லவ் சார்'... 'கல்யாணத்துக்கு கால் டாக்ஸி டிரைவர் போட்ட பட்ஜெட்' ... அசந்து போன சொந்தக்காரர்கள்!
- ‘80 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை’... ‘புரட்டி போடும் கொரோனாவுக்கு மத்தியில்’... ‘ஆசுவாசப்படுத்திய செய்தி’!
- 4 ஆயிரத்தை 'நெருங்கும்' எண்ணிக்கை... பாதிப்பு 600ஐத் 'தாண்டிய' மண்டலங்கள்... 'சென்னை' கொரோனா நிலவரம்...
- 'பிரசவ அறையில் இருந்த மனைவியை'... 'பார்க்க துடித்த கணவர்'... 'அனுமதிக்காத டாக்டருக்கு நிகழ்ந்த நடுங்க வைக்கும் பயங்கரம்'!
- 'இன்னும்' முடியல... 'அதிரடி' நடவடிக்கைகளால் கொரோனாவை 'வென்றும்'... மக்களை 'அதிர்ச்சியில்' ஆழ்த்தியுள்ள 'எச்சரிக்கை'...
- "முக்கால்வாசி ஊரடங்கு தளர்வு.. ஓரிரு வாரங்களில் கால்பந்து போட்டி!".. அதிபரின் அறிவிப்புக்கு பின்.. 'காத்திருந்து' மீண்டும் 'தலைதூக்கும்' கொரோனா வைரஸ்.. அதிர்ந்துபோன நாடு!
- 'கொரோனாவால்'.. 'வேலை இழந்த' 30 லட்சம் 'ஊழியர்கள்'! .. வாரம் ஒருமுறை 'மானிய நிதி வழங்க' முடிவெடுத்த 'நாடு'!
- 'சென்னையில்’ அடுத்த 6 நாட்களுக்கு... ‘கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும்’... கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்!
- முதல்ல ஒண்ணுமே தெரியல... தற்போது காட்டுத் தீ போல பரவும் கொரோனாவால்... திகைக்கும் நாடுகள்!