'ஒருவர் ஊரடங்கை மீறும்போது வரும் அபாயம் என்ன!?'... மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பாதித்த ஒருவர், ஊடரங்கு உத்தரவை பின்பற்றாவிட்டால் வரும் அபாயம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புப்படி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது:
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2500 ரயில் பெட்டிகள் இதுவரை தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் 40 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
நாள் ஒன்றுக்கு 152 விமானங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பட்டுள்ளது. இதன் மூலம், 200 டன்கள் அளவிற்கு பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஊடரங்கு உத்தரவை ஒருவர் பின்பற்றாவிட்டால் அவர் மூலமாக 406 பேருக்கு பரவ வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவால் அம்பானி இழந்தது எவ்வளவு தெரியுமா?... டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து காணாமல் போன இந்தியர்கள் யார்?... கடும் நெருக்கடியில் இந்திய நிறுவனங்கள்!
- 'தம்பி அங்க என்ன பாக்குறீங்க'... 'லாக்டவுனால் வீடியோகாலில் நடக்கும் விபரீதம்'... அதிர்ச்சி ரிப்போர்ட்!
- 'அட, இந்த பிளான் நம்ம லிஸ்ட்லயே இல்லையே' ... 'கொரோனா' விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க ... 'திருவண்ணாமலை' போலீசாரின் வித்தியாசமான முயற்சி!
- 'வாட்ஸ் அப்-ல இதெல்லாம் இனி செய்ய முடியாது!'... வாட்ஸ் அப் நிறுவனம் அதிரடி நடவடிக்கை!
- 'ஊரடங்கின்' போது பயங்கரம்... வீட்டில் 'டிவி' பார்த்து கொண்டிருந்த... 'பிளஸ்-2' மாணவியை கொலை செய்த தந்தை!
- ‘பீனிக்ஸ்’ மாலுக்கு போன யாருக்காவது ‘கொரோனா’ பாதிப்பு இருக்கா..?.. சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
- 'ஊரடங்கு முடிஞ்சு தான் கிளைமாக்ஸ்'...'இந்த பொருட்களின் விற்பனை செம அடி வாங்கும்'...அதிர்ச்சியில் நிறுவனங்கள்!
- பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு போராடிய மருத்துவர்கள் கைது..! பாகிஸ்தானில் பரபரப்பு..!
- 'ரூபாய்' நோட்டில் இவ்வளவு நேரம் 'வைரஸ்' இருக்குமா? 'முகக்கவசத்தை ஏன் தொடக்கூடாது?...' 'விஞ்ஞானிகளின்' புதிய 'ஆய்வு' முடிவுகள்...
- 'மகாராஷ்டிரா' டூ 'தமிழகம்' ... 'ஏழு நாட்கள்' ... 'ஆயிரம் கிலோமீட்டர் நடை' ... தமிழக இளைஞர்களின் வேதனைப்பயணம்!