"பத்தாவதுல எல்லாத்துலயும் ஜஸ்ட் பாஸ்.. எல்லோரும் கிண்டல் பண்ணாங்க..ஆனா இப்போ" ..ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த மார்க்ஷீட்.. வேற லெவல் சார் நீங்க..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சக ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் பத்தாவது மதிப்பெண் சான்றிதழை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

ஒவ்வொரு மாணவர்களுக்கும் தங்களது வாழ்வில் ஒருமுறையாவது ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்கு செல்ல வேண்டும் என தோன்றியிருக்கும். அப்படி பொது மக்களால் அதிகளவில் மதிக்கப்படும் அதிகாரிகளும் சாதாரண பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் தான் என்பது தெரியவந்தால் அதுவே பலருக்கும் உந்துசக்தியாகவும் மாறிவிடுகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சக ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தங்களில் வைரலாக பரவி வருகிறது.

வைரல் ட்வீட்

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கிவருபவர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அவனீஷ் சரண். தன்னம்பிக்கை அளிக்கும் விஷயங்கள் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டுவரும் இவர் சக ஐஏஎஸ் அதிகாரியான துஷார் மெஹ்ரா என்பவரின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் பலரையும் வியப்படைய 
செய்திருக்கிறது.

காரணம் துஷார் மெஹ்ரா தேர்ச்சி பெறத்தக்க மதிப்பெண்களை மட்டுமே பெற்று பத்தாவத்தை முடித்திருக்கிறார். இருப்பினும் ஐஏஎஸ் ஆகவேண்டும் என்ற கனவினை நோக்கி அவர் எடுத்த முயற்சிகளே அவரை தற்போது அதிகாரியாக மாற்றியிருக்கிறது. அவரது கடின உழைப்பை உலகறிய செய்யும் வகையில் இந்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் அவனீஷ் சரண்.

ஜஸ்ட் பாஸ்

அவனீஷ் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில், " பருச் கலெக்டர் துஷார் சுமேரா, 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை பகிர்ந்து உள்ளார். அவர் 100க்கு ஆங்கிலத்தில் 35 மதிப்பெண்களும், கணிதத்தில் 36 மதிப்பெண்களும், அறிவியலில் 38 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார். ஒட்டு மொத்த கிராமம் மட்டுமின்றி அந்த பள்ளியிலும் சிலர் இவரால் ஒன்றும் செய்யமுடியாது என்று நினைத்திருக்கின்றனர்" என்று குறிப்பிட்டு, துஷாரின் மதிப்பெண் பட்டியலையும் அவர் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவனீஷ் சரண் அவர்களின் இந்த பதிவிற்கு துஷார் நன்றி தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், சராசரி மதிப்பெண் பெற்றவர்களும், மன உறுதியும் விடா முயற்சியும் இருந்தால் நிச்சயம் ஐஏஎஸ் போன்ற உயர் பதவிகளை அடையலாம் என்பதற்கு துஷார் போன்றவர்களே சாட்சி என நெட்டிசன்கள் தெரிவித்துவருகின்றனர்.

IAS, 10TH, MARKSHEET, ஐஏஎஸ், பத்தாவது, மதிப்பெண்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்