"10வதுல நான் வாங்குன Mark".. IAS அதிகாரி வெளியிட்ட photo.. Inspire ஆகி பகிர்ந்து வரும் இளைஞர்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

சாதாரண பின்புலத்தில் இருந்து தங்களது உழைப்பில் முன்னேறி சமூகத்தில் உயர்ந்த நபர்கள் பலரும் எப்போதும் பலருக்கும் சிறந்த முன்னுதாரணமாக திகழ்வது உண்டு. அனைவரும் கடின உழைப்பின் மூலம் முன்னேறலாம், அதற்கு பொருளாதாரமோ, மதிப்பெண்களோ தடை இல்லை என்பதை பலரும் வலியுறுத்தியிருப்பதை பார்த்திருப்போம். அந்த வகையில் ஐஏஎஸ் அதிகாரியான அவனீஷ் சரண் தனது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் பலரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

அவனீஷ் சரண்

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அவனீஷ் சரண். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் ஈடுபட்டு வரும் அவனீஷ், தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் சமூக மேம்பாடு, தன்னம்பிக்கை அளிக்கும் தகவல்களையும் அவ்வப்போது பதிவிடுவது வழக்கம். இதன் காரணமாகவே இவரை ட்விட்டர் பக்கத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பதிவிட்டுள்ள புகைப்படம் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

மார்க்ஷீட்

அவனீஷ் சரண் தனது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை பதிவிட்டுள்ளார். அவர் 1996 இல் பீகார் பள்ளி தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவனீஷ் 700 மதிப்பெண்களுக்கு 314 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். அதாவது பத்தாம் வகுப்பில் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார் அவனீஷ்.

முன்னதாக  சக ஐஏஎஸ் அதிகாரியான துஷார் மெஹ்ரா என்பவரின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில்,"பருச் கலெக்டர் துஷார் சுமேரா, 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை பகிர்ந்து உள்ளார். அவர் 100க்கு ஆங்கிலத்தில் 35 மதிப்பெண்களும், கணிதத்தில் 36 மதிப்பெண்களும், அறிவியலில் 38 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார். ஒட்டு மொத்த கிராமம் மட்டுமின்றி அந்த பள்ளியிலும் சிலர் இவரால் ஒன்றும் செய்யமுடியாது என்று நினைத்திருக்கின்றனர்" என்று குறிப்பிட்டு, துஷாரின் மதிப்பெண் பட்டியலையும் அவர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தனது மதிப்பெண் பட்டியலையும் அவனீஷ் பதிவிட்டுள்ளார். இது நெட்டிசன்களிடையே வைரலாக பரவி வருகிறது. உங்களது வாழ்க்கை உத்வேகம் அளிப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

IAS, AWANISHSHARAN, MARKSHEET, ஐஏஎஸ், அவனீஷ்சரண், மதிப்பெண்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்