மனு கொடுக்க வெயிலில் காத்திருந்த மாற்றுத் திறனாளி முதியவர்.. ஸ்பாட்-லயே IAS அதிகாரி எடுத்த நெகிழ வைக்கும் நடவடிக்கை.!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தில் உதவி கோரி மனுகொடுக்க வந்த மாற்றுத் திறனாளி முதியவருக்கு கலெக்டர் வேண்டிய உதவிகளை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
உத்திர பிரதேசத்தின் கான்பூர் தேஹட் மாவட்டத்தில் உள்ளது அமருதா நகர் பஞ்சாயத்து. இந்த பகுதியை சேர்ந்தவர் தானிராம். மாற்றுத் திறனாளியான இவர் சமீபத்தில் எலெக்ட்ரிக் சைக்கிள்களை அரசு இலவசமாக அளிக்கும் திட்டம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறார். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியாளரிடம் தனக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்க கோரி மனுகொடுக்க சென்றிருக்கிறார்.
கொளுத்தும் வெயிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற தானிராம் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வெயிலில் காந்திருந்திருக்கிறார். அப்போது அவரை கண்ட கலெக்டர் சவுமியா பாண்டே, உடனடியாக தானிராமை சந்திக்க கட்டிடத்தை விட்டு வெளியே வந்திருக்கிறார். இதனால் அருகில் இருந்த அதிகாரிகள் பரபரப்படைந்தனர். பின்னர் சாலையில் அமர்ந்தபடி தானிராம் உடன் அவர் பேசி அவருடைய குறைகளை கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்போதே பேசிய மாவட்ட கலெக்டர் சவுமியா பாண்டே, உடனடியாக முதியவர் தானிராமுக்கு எலெக்ட்ரிக் சைக்கிள் வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். இதுதொடர்பாக வெளிவந்துள்ள ட்விட்டர் பதிவில் தானிராமை கலெக்டர் சவுமியா பாண்டே சந்தித்து பேசும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.
இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதுடன் நெட்டிசன்கள் பலரும் மாவட்ட ஆட்சியர் சவுமியா பாண்டேவை பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கல்யாணத்துக்கு பொண்ணு தேடியும் கிடைக்கல.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன இளைஞர்.. லெட்டரை பார்த்து ஆச்சர்யமான அதிகாரிகள்..!
- பூட்டிய வீட்டுக்குள்ள இருந்து ஊதுபத்தி வாசனை.. 4 நாள் கழிச்சு எழுந்த கடுமையான துர்நாற்றம்.. போலீஸ் விசாரணையில் தெரியவந்த திடுக் தகவல்கள்..!
- ஒரே தும்மலில் சரிந்து விழுந்து இளைஞர் மரணம் .. நண்பர்களுடன் வாக்கிங் போனபோது சோகம்..
- உ.பியில் மற்றுமொரு கொடூர காதலன்.. காதலிக்கு அரங்கேறிய சோக "சம்பவம்"
- ATM-ல் வந்த ₹ 200 புது நோட்டு.. பார்த்துட்டு ஷாக் ஆன மனுஷன் .. வைரலாகும் வீடியோ..!
- பிரதமர் வருகை! ஒளியால் விழாக்கோலம் பூண்டது அயோத்தி! கின்னஸ் சாதனை படைத்த தீப உற்சவம்..
- BREAKING: உ.பி முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் காலமானார்.. அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள்..!
- ரயில் வரும்போது நடைமேடைக்கும் தண்டவாளத்திற்கும் இடையே சிக்கிய பயணி! அதிர்ஷ்டவசமாக தப்பிய நிமிடங்கள்
- புருஷனை காணோம்னு போலீசில் புகாரளித்த மனைவி.. விசாரணைல வெளிவந்த திடுக்கிடும் தகவல்.. தாய், மற்றும் மகனை கைது செய்த போலீஸ்..!
- ஒரே வீட்ல 4 IAS, IPS .. இந்தியாவையே திரும்பி பார்க்க வச்ச சகோதர, சகோதரிகள்.. எல்லாத்துக்கும் அப்பா போட்ட "ஒரே கண்டிஷன்"தான் காரணம்..!