"ஒரு நாளைக்கு 8 நிமிஷம் தான் வேலை; ஆனா வருஷம் ரூ. 40 லட்சம் சம்பளம்".. முதல்வருக்கு கடிதம் எழுதிய ஐஏஎஸ் அதிகாரி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹரியானா மாநிலத்தில் ஆவண காப்பகத்துறையில் கூடுதல் தலைமை செயலாளராக பணிபுரிந்துவரும் அசோக் கெம்கா எனும் அதிகாரி அம்மாநில முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Advertising
>
Advertising

                               Images are subject to © copyright to their respective owners.

Also Read | 8 வயசுலயே ஜனாதிபதியிடம் விருது.. இந்தியாவின் இளம் ஜீனியஸ்.. யாருப்பா இந்த ரிஷி ஷிவ் பிரசன்னா.?

இந்தியாவில் அதிகமுறை பதவி மாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி என அசோக் கெம்காவை பலரும் அழைக்கிறார்கள். அதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது. 30 ஆண்டுகள் ஐஏஎஸ் அதிகாரியாக பதவி வகித்திருக்கும் கெம்கா இதுவரையில் 56 முறை பதவி மாற்றத்தை சந்தித்திருக்கிறார். இதனிடையே சமீபத்தில் இவர் ஹரியானா மாநிலத்தின் ஆவண காப்பகத் துறையின் கூடுதல் தலைமை செயலாளராக பதவி மாற்றம் செய்யப்பட்டார். இப்பதவிக்கு அவர் நான்காவது முறையாக மாற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார் அசோக் கெம்கா. அதில் தனக்கு ஆவண காப்பகத்துறையில் போதிய வேலை இல்லை எனவும் ஆகவே தன்னை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றும்படியும் கோரிக்கை வைத்திருக்கிறார் அவர்.

Image Credit : PTI

அந்த கடிதத்தில்,"கடந்த 9 ஆம் தேதி நான் ஆவண காப்பகத்துறையின் கூடுதல் தலைமை செயலாளராக பதவிமாற்றம் செய்யப்பட்டேன். இந்தத் துறையின் ஆண்டு பட்ஜெட் ரூ. 4 கோடிகள், மொத்த மாநில பட்ஜெட்டில் 0.0025%க்கும் குறைவானது. கூடுதல் தலைமைச் செயலாளராக எனது ஆண்டு ஊதியம் ரூ. 40 லட்சம், இதுவே துறையின் மொத்த பட்ஜெட்டில் 10% ஆகும். இங்கே எனக்கு ஒரு நாளைக்கு 8 நிமிடங்கள் மட்டுமே வேலை இருக்கிறது. கூடுதல் தலைமை செயலாளர் பதவியில் இருப்போருக்கான சிவில் சர்வீஸ் வாரியத்தின் விதிமுறைகளின்படி எனக்கு வாரத்திற்கு 40 மணி நேரங்கள் வேலை இருக்கும் துறையை ஒதுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஊழலை பார்க்கும்போதெல்லாம் தனது மனது புண்படுவதாகவும் அதனை ஒழிக்க தனது பணி காலத்தை தியாகம் செய்திருப்பதாகவும் அசோக் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில்,"ஊழலை ஒழிப்பதில் லஞ்ச ஒழிப்புத்துறை முக்கிய அங்கமாக உள்ளது. ஆகவே, என்னுடைய பணி காலத்தின் இறுதி ஆண்டுகளில் அந்த துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் ஊழலுக்கு எதிரான மிகப்பெரிய போரை தொடுப்பேன். ஊழல் செய்பவர் யாராக இருந்தாலும் அவரை விட்டுவிடமாட்டேன்" எனவும் அசோக் குறிப்பிட்டுள்ளார்.

Image Credit : PTI

தொடர்ந்து கடந்த 1987 ஆம் ஆண்டு பிகே.சின்னசாமிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடுத்திருந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை மேற்கோள்காட்டி,"ஒரு அரசு அதிகாரிக்கு அவரது அஸ்தஸ்துக்கு ஏற்ப பதவி வழங்கப்பட வேண்டும்" என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அசோக்கின் பதவிக்காலம் வரும் 2025 ஆம் ஆண்டுடன் நிறைவடைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் EVKS இளங்கோவன் .. கமலின் மக்கள் நீதி மய்யம் ஆதரவு.!

IAS OFFICER, IAS OFFICER ASHOK KHEMKA, HARYANA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்