'நான் ஒன்னும் தற்கொலைக்கு முயற்சிக்கல'.. இதுக்கெல்லாம் காரணமே இதான்!'.. நீதிபதி மருமகள் தாக்கப்பட்ட வீடியோ.. 'புதிய' திருப்பம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான நூட்டி ராமமோகன் ராவ் , அவரது மனைவி துர்கா ஜெயலட்சுமி மற்றும் இவர்களது திருமணமான மகன் வசிஸ்ட் மூவரும் சேர்ந்து வசிஸ்டின் மனைவியும், அந்த வீட்டின் மருமகளுமான சிந்து ஷர்மாவை அவரது பெண் குழந்தைகளின் கண் முன்னேயே வைத்து தாக்கும் காட்சிகள் சிசிடிவி மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

சிந்து ஷர்மாவின் குழந்தை, தன் தாயை அடிக்க வேண்டாம் என காலில் விழுந்து கதறியபோதும் சிந்து ஷர்மா தாக்கப்படுவதாக அந்த வீடியோ வெளியானது. ஆனால் அந்த வீடியோவில் சிந்து ஷர்மா தனக்கு சாதகமான பகுதிகளை மட்டுமே வெளியிட்டுள்ளதாகவும் உண்மையில் சிந்து ஷர்மா தற்கொலைக்கு முயற்சிதால், தன் குடும்பத்தினர் அவரைத் தடுக்கவே முயற்சித்ததாகவும் வசிஸ்ட் தெரிவித்துள்ளார்.

ஆனால், 2 பெண் குழந்தைகள் இருக்கும்போது தான் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்றும், அப்படியே இருந்தாலும் அதை ஏன் வசிஸ்ட் இவ்வளவு தாமதமாக கூறுகிறார் என்றும், மேலும் தான் தாக்கப்பட்டதற்குக் காரணமே வரதட்சணையையும் தாண்டி,  தனக்கு 2 பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கிறார்கள்; தனக்கு ஆண் குழந்தை இல்லை என்பதுதான் என்றும் சிந்து ஷர்மா தற்போது தெரிவித்துள்ளார்.

SUICIDEATTEMPT, HYDERABAD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்