'ஐயா அப்போ எனக்கு 19 வயசு தான்'... 'நிர்பயா வழக்கில் புது ட்விஸ்ட்'... என்னவாகும் தூக்குத்தண்டனை?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் நால்வருக்கு தூக்கு தண்டனைக்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமார் ஷர்மா உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு கடந்த 7ம் தேதி பாட்டியாலா நீதிமன்றம் தூக்குத் தண்டனைக்கான வாரண்டை பிறப்பித்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய நான்கு பேரையும்வரும் 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமார் ஷர்மா, பாட்டியாலா நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் ''குற்றம் நடந்தபோது எனக்கு 19 வயது தான் ஆனது. மேலும் என்னுடைய பின்தங்கிய பொருளாதாரம் மற்றும் வயதை கருத்தில் கொள்ள வேண்டும். கற்பழிப்பு மற்றும் கொலைவழக்கில் சம்மந்தப்பட்ட 17க்கும் மேற்பட்ட வழக்கில் சிறார்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் மாற்றி உள்ளது. அதேப்போன்ற கருணையை வினய்க்கு வழங்க வேண்டும்'' என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூக்கு தண்டனை நிறைவேற்ற பட இருக்கும் வேளையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த மனு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவதை தாமதப்படுத்துமா என்ற கேள்வியை பலரது மத்தியில் எழுப்பியுள்ளது.

RAPE, NIRBHAYA, CONVICT, SUPREME COURT, HANGING, CURATIVE PETITION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்