'நோ ஃபேஸ்புக்...' 'நோ ட்விட்டர்...' 'நோ இன்ஸ்டாகிராம்...' 'பிரதமர்' அதிரடி 'முடிவு'... பதிலுக்கு 'டிரெண்டிங்' ஆகும் 'நோ சார்' ஹேஸ்டேக்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரதமர் மோடி ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை விட்டு வெளியேறுவதாக பதிவிட்ட டுவிட்டை அடுத்து, ஏராளமானோர் 'NoSir' என பதிவிட்டு வருகின்றனர். இதனால், '#NoSir' ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி உள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்களில் மிக ஆர்வமாக இருக்கக் கூடியவர். அவருடைய அன்றாட நிகழ்வுகள் குறித்து ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் அவருடைய யூட்யூப் பக்கம் ஆகியவற்றில் தொடர்ந்து பதிவிட்டுவருகிறார்.

உலக அளவில் அதிக பேரால் பின்தொடரப்படுப்படும் உலகத் தலைவராக மோடி இருந்துவருகிறார். அவரை, ட்விட்டரில் 5.3 கோடி பேரும் ஃபேஸ்புக்கில் 4.45 கோடி பேரும், யூட்யூப்பில் 45 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 3.5 கோடி பேரும் பின்பற்றுகின்றனர்.

இந்நிலையில், டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களை விட்டு வெளியேறுவது குறித்து யோசித்து வருவதாக, பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

அவரது டுவிட்டர் பதிவுக்கு, பலரும் 'NoSir' என பதிவிட்டு வருகின்றனர். இதனையடுத்து '#NoSir' ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

பிரதமரின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி தனது டுவிட்டரில், 'வெறுப்புணர்வை கைவிடுங்கள்; சமூக வலைதளங்களை அல்ல' என பதிவிட்டுள்ளார்.

 

NARENDRAMODI, MODI, SOCIALMEDIA, FACEBOOK, TWITTER, INSTAGRAM, NOSIR, HASHTAG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்