'புகார் அளித்த பெண்'.. 'பணம் பறித்தல் வழக்கில் சிக்கினாரா?'.. சின்மயானந்தா வழக்கில் அடுத்தடுத்த ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்தா, தனது சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, மாணவி அளித்த புகாரின் பேரில் ஷாஜகான்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து அம்மாணவி கூறும்போது, காலையில் நிர்வாண மசாஜ் செய்யச் சொல்லியும், மதியம் 2.30 மணி ஆனால் பாலியல் துன்புறுத்தலுக்கு தன்னை ஆளாக்கியும் சித்ரவதை செய்ததாகவும், அவற்றை தனது மூக்குக் கண்ணாடி கேமிராவுக்குள் பதிவு செய்துகொண்டதாகவும், அதன் பின்னர் விடுதியில் இருந்து தப்பித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சின்மயானாந்தாவின் உடல்நிலை மோசமானதாகக் கூறி லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அம்மாணவியின் நண்பர்கள், சின்மயானந்தா தொடர்பான ரகசிய வீடியோக்களை அழிப்பதற்கு 5 கோடி ரூபாய் கேட்டு சின்மயானந்தாவிடம் பேரம் பேசியதாகக் கைது செய்யப்பட்டனர்.

இதில் அம்மாணவிக்கும் தொடர்புண்டு என்று சிறப்பு விசாரணைக் குழு கடந்த வாரம் குற்றம் சாட்டியதை அடுத்து, மாணவி தனக்கு முன் ஜாமீன் கோரியிருந்தார். ஆனால் அலகாபாத்  உயர்நீதிமன்றம் மாணவிக்கு பெயில் தர மறுத்த நிலையில், அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை என்றும், பணம் பறித்தல் வழக்கில் மாணவிக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்படவில்லை என்றும் மாணவியின் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

CHINMAYANANDCASE

மற்ற செய்திகள்