‘கொரோனா சிகிச்சைக்கு கொடுக்கப்படும் மருந்து’... ஆய்வில் வெளியான ‘அதிர்ச்சி’ தகவல்... ‘எச்சரித்த’ இந்திய மருத்துவ கவுன்சில்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவை தடுக்கும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவுகள் ஏற்படும் என மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மலேரியாவுக்கு பயன்படுத்தும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளை உட்கொள்ளலாம் பல நாடுகள் கூறின. இதனால் அதிகளவில் அந்த மாத்திரைகளை உற்பத்தி செய்யும் இந்தியாவில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் லட்சக்கணக்கில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
ஆனால் இவற்றை சாப்பிட்டவர்களுக்கு வயிற்று வலி, குமட்டல், ரத்தத்தில் சர்க்கரை குறைவு போன்ற பிரச்சினைகள் இருப்பதாக கூறப்பட்டது. ஏற்கனவே இந்திய மருத்துவ கவுன்சில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை தடுப்பு மருந்தாகவோ, தீர்வாகவோ இதுவரை அங்கீகரிக்கவில்லை. அதை தீவிர பாதிப்புக்கு உட்பட்டவர்களுக்கும், கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்த குடும்பத்தாருக்கும் மட்டுமே தருவதற்கு பரிந்துரைத்துள்ளது. சுயமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை.
இந்தநிலையில், ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை சம்பந்தமாக இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. 35 வயது உடையவர்களை சராசரி வயதாக கணக்கில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 10 சதவீதம் பேருக்கு வயிற்று வலி இருப்பதும், 6 சதவீதம் பேருக்கு குமட்டல் இருப்பதும், 1.3 சதவீதம் பேருக்கு ரத்த சர்க்கரை குறைவு இருப்பதும் தெரிய வந்தது. இதனால் ஏற்படும் பக்க விளைவு குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் தேவையில்லாமல் இந்த மருந்துகளை சுயமாக பயன்படுத்த வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சென்னையில் 3 வயது குழந்தை உள்பட’... ‘ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று’!
- தமிழகத்தில் இன்று 43 பேருக்கு கொரோனா!.. 46 பேர் டிஸ்சார்ஜ்!.. முழு விவரம் உள்ளே!
- 'லாக்டவுன்' நேரத்திலும் 'வேலை பார்த்த'... 'பத்திரிகையாளர்கள்' 53 பேருக்கு 'கொரோனா...' பலருக்கு 'ரிசல்ட்' வர வேண்டியுள்ளதால்...'எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு...'
- கொரோனா தொற்றால் இறந்தவர் உடலில் இருந்து வைரஸ் பரவுமா? பரவாதா?.. விரிவான விளக்கம்!
- ‘கல்லையும், கட்டையையும் வச்சு அடிச்சாங்க’.. ‘மக்கள் கொடுக்கும் பரிசு இதுதானா?’.. சென்னை டாக்டர் கண்ணீர் மல்க உருக்கம்..!
- ‘எல்லோரையும் சமமா நடத்துங்க’... ‘வழிகாட்டுதல்களில் எல்லையை தாண்டுறீங்க’... ‘இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா’!
- 'சென்னையில்', தனியார் டிவி 'உதவி ஆசிரியருக்கு' கொரோனா... 'அலுவலகத்தை' தற்காலிகமாக பூட்டி சீல் வைத்த 'சுகாதாரத்துறை அதிகாரிகள்...'
- 'கொரோனா தாக்கிய நோயாளிகள்'... 'பெரும்பாலானோருக்கு இருந்த ஒரே ஒற்றுமை' ... ஒரு நிமிஷம் ஆடிப்போன விஞ்ஞானிகள் !
- 'இந்தியா' உட்பட 10 நாடுகளை விட 'இதை' அதிகமாக செய்துள்ளோம்... இல்லையென்றால் 'உயிரிழப்பு' பல மடங்கு 'உயர்ந்திருக்கும்'...
- கடைசில 'தண்ணி'யையும் இந்த 'கொரோனா' விட்டு வைக்கல போல... 'எந்த' நாட்டுலன்னு பாருங்க!