'வேலை போச்சு... காசு இல்ல.. வயித்து பொழப்புக்கு என்ன பண்றது?'.. செலவுக்கு பணம் இல்லாததால்... பெற்ற குழந்தையை... பதறவைக்கும் பகீர் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஊரடங்கு காரணமாக வேலை இழந்ததால் செலவுக்கு பணம் இல்லாமல் தவித்த தம்பதி, தங்களது குழந்தையை ரூ.22 ஆயிரத்துக்கு விற்ற சம்பவம் தொடர்பாக போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Advertising
Advertising

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் மதன்சிங். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சரிதா. இவர்களுடைய சொந்த ஊர் மெகபூபா மாவட்டத்தில் உள்ளது. அங்கிருந்து இங்கு இடம்பெயர்ந்து கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே 7 வயதில் மகன் இருக்கிறான். 2 மாதங்களுக்கு முன்பு சரிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அதே நேரத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மதன்சிங் வேலை இழந்தார். வீட்டு செலவுக்கு பணம் இல்லை. எனவே குழந்தையை விற்று விடுவது என முடிவு செய்தனர்.

அவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சேசு என்பவருடைய சகோதரிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்தது. அவருக்காக இந்த குழந்தையை வாங்கிக்கொடுக்க சேசு முடிவு செய்தார்.

இதற்காக மதன்சிங்கிடம் பேரம் பேசினார்கள். ரூ.22 ஆயிரத்திற்கு விலைபேசி குழந்தையை விற்றனர். இது சம்பந்தமாக பத்திரம் ஒன்றும் தயார் செய்தார்கள். அதில் அந்த பகுதியை சேர்ந்த 3 பேர் சாட்சி கையெழுத்து போட்டனர். ஆனால் குழந்தையை விற்றதற்கு பிறகு பிரிவை தாங்க முடியாமல் சரிதா வீட்டில் அழுதபடி இருந்தார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் குழந்தை விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கணவன்-மனைவி இருவரையும் கைது செய்தனர். மேலும் குழந்தையை வாங்கிய பெண், அவரது சகோதரர், சாட்சி கையெழுத்து போட்டவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

பின்னர், குழந்தை மீட்கப்பட்டு பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்