'12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கான்ஸ்டபிள்...' 'அம்மா, அந்த அங்கிள் என்ன கூப்பிட்டு...' விஷயம் வெளிய தெரிஞ்சா கொன்ருவேன்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஈடுபடுத்திய ஹைதராபாத் காவலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ஹைதராபாத் காவல்துறை ஆணையர் அஞ்சனி குமார் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தின் ராம்கோபால்பேட் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் போவான்பள்ளி கிராமத்தை சேர்ந்த 33 வயதான உமேஷ். இவர் தன் வீட்டு பக்கத்தில் இருக்கும் தூரத்து உறவினரின் மகளான 12 வயது சிறுமியை வீட்டில் யாரும் இல்லாத சமயம் சென்று பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன் சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதனை வெளியே சொன்னால் சிறுமியை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

தனக்கு நடந்த கொடுமையை சிறுமி தன் அம்மாவிடம் சொல்லியுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் தன் பெண்ணுக்கு நடந்த கொடுமைக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்கவேண்டும் என்று போவன்பள்ளி கிராமத்தில் உள்ள  பாலாலா ஹக்குலா சங்கத்தை (சிறுவர் உரிமைகள் சங்கம்) அணுகியுள்ளனர். அவர்களின் மூலமே காவல்துறை உயர் அதிகாரிகளிடம் இந்த விவகாரம் சென்றுள்ளது.

மேலும் கடந்த வியாழன்று சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் காவலர் உமேஷ் , இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (3) (சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தல்) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டம் பிரிவு 5 (அ) ஆர் / டபிள்யூ 6 ஆகியவற்றின் கீழ் கான்ஸ்டபிள் மீது போவன்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய ஹைதராபாத் காவல்துறை ஆணையர் அஞ்சனி குமார் 'எதுவும் சட்டத்திற்கு மேல் இல்லை. சிறுமியை துன்புறுத்திய ராம்கோபால்பேட்டின் கான்ஸ்டபிளை நாங்கள் கைது செய்ய வேண்டியிருந்தது. அவர் சிறைக்கு அனுப்பப்படுகிறார். எங்கள் துறையில் இதுபோன்ற கருப்பு ஆடுகள் இருப்பதாக நான் வெட்கப்படுகிறேன்,' என ட்வீட் செய்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்