‘ரூம் போட்டு யோசிப்பாங்களோ’..! ‘ஜொமேட்டோவ இப்டி எல்லாம் கூடவா யூஸ் பண்ண முடியும்..?’ இளைஞருக்கு குவியும் பாராட்டுகள்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஜொமேட்டோவை இலவச பயணத்திற்காகப் பயன்படுத்திய ஹைதராபாத் இளைஞருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒபேஷ் என்ற இளைஞர் இரவு 12 மணியளவில் வணிக வளாகம் ஒன்றிலிருந்து வீட்டிற்கு கிளம்பியுள்ளார். அப்போது அங்கிருந்து வீட்டிற்கு செல்வதற்கு ஆட்டோ எதுவும் கிடைக்காமல் சிரமப்பட்ட அவர் கால் டாக்ஸிக்கும் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டி இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது.

ஒபேஷ் தான் இருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஜொமேட்டோ மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். பின்னர் அதை டெலிவரி செய்யும் நபருக்கு ஃபோன் செய்தவர் தன்னுடைய வீட்டிற்கு உணவு ஆர்டர் செய்துள்ளதாகவும், அருகிலிருக்கும் தன்னையும் சேர்த்து வீட்டில் இறக்கிவிட முடியுமா எனக் கேட்டுள்ளார்.

இதற்கு டெலிவரி செய்யும் நபரும் சம்மதிக்க அவருடனேயே ஒபேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். இதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ள அவர், “இலவச பயணத்திற்கு நன்றி ஜொமேட்டோ” எனத் தெரிவித்துள்ளார். அவரது பதிவிற்கு டிவிட்டரில் ஜொமேட்டோ தரப்பிலிருந்து, “நவீன பிரச்சனைக்கு நவீன தீர்வு தேவைப்படுகிறது” என இமேஜ் ஒன்றும் பகிரப்பட்டுள்ளது.

 

 

HYDERABAD, MAN, ZOMATO, FOOD, DELIVERY, FREE, RIDE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்