மொத்தம் 11... ஆனால் 'இறந்தவர்களின்' உடலில்... எந்தவொரு 'புல்லட்டும்' இல்லை.. பிரேத பரிசோதனை அறிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த வாரம் தெலுங்கானா என்கவுண்டரில் இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது.
பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி இறந்த வழக்கில் முகம்மது ஆரிஃப், சென்ன கேசவலு, நவீன், சிவா ஆகிய நால்வரை ஹைதராபாத் காவல்துறை கைது செய்தது. தொடர்ந்து நால்வரையும் விசாரணைக்கு அழைத்துச்சென்ற போது அவர்கள் நால்வரும் தப்பி ஓட முயற்சி செய்ததாகவும், அதனால் அவர்கள் நால்வரையும் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாக காவல்துறையினர் விளக்கம் அளித்தனர்.
இந்தநிலையில் இறந்த நால்வரின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் முஹம்மது உடலில் நான்கு புல்லட்டுகள் இருந்ததற்கான தடயமும், சிவா, சென்ன கேசவலு உடல்களில் 3 குண்டுகள் இருந்ததற்கான தடயமும் நவீன் உடலில் 1 குண்டு பாய்ந்ததற்கான அடையாளம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் நால்வரின் உடலிலும் ஒரு குண்டு கூட தங்கவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது உச்சநீதிமன்றம் சார்பாக இந்த என்கவுண்டர் வழக்கை விசாரித்திட 3 பேர் அடங்கிய விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு இருக்கிறது. மறுபுறம் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இந்த என்கவுண்டர் வழக்கை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நடந்த 'உண்மை' மக்களுக்கு தெரிய வேண்டும்... 'என்கவுண்டர்' விவகாரத்தில்... 'தெலுங்கானா' அரசு தலையிடக் கூடாது!
- 'கற்பழிப்பை கனவுல கூட நினைக்க கூடாது'...'என்ன சொல்கிறது புதிய சட்டம்'?...'ஜெகன்' அதிரடி!
- விபத்தில் ‘இறந்துவிட்டார்’ என நினைத்தபோது... ‘காவலர்’ செய்த காரியத்தால் ‘நிமிடங்களில்’ நடந்த அதிசயம்.. வைரலாகப் பரவும் வீடியோ..
- 'செல்பி' மோகத்தால்... இளைஞருக்கு 'நேர்ந்த' விபரீதம்... 2-வது நாளாக உடலைத்தேடும் போலீசார்!
- டேய் தம்பி 'ஆபாச' படம் பாத்தியா?.. நெல்லை இளைஞருக்கு 'மிரட்டல்'.. வைரலான 'ஆடியோ'.. யார் காரணம் தெரியுமா?
- காதலியா? நிச்சயம் செய்த பெண்ணா?..குழப்பத்தில்.. இளைஞர் எடுத்த 'விபரீத' முடிவு!
- உனக்கெல்லாம் 'அம்மா-தங்கச்சி' இல்ல?.. ஷூவால்.. இளைஞனை 'வெளுத்தெடுத்த' போலீஸ்!
- 12 லட்சம் ரெக்வஸ்ட்.. 8 லட்சம் விசிட்.. சர்வரே 'முடங்கி' போச்சு.. கொஞ்சம் 'டைம்' குடுங்க பக்தர்களே!
- 10 'தூக்குக்கயிறு' அர்ஜெண்டா வேணும்.. சிறைக்கு 'பறந்த' உத்தரவு.. நிர்பயா குற்றவாளிகளுக்கானதா?
- மொத்தம் 6500 பேர்.. 'மாணவ,மாணவிகள்'... அரசியல்வாதிகள்.. 'லிஸ்டைப்' பார்த்து.. 'அதிர்ந்து' போன போலீஸ்!