'மாமனாரைத் தாக்கி...' 'மிளகாய்ப் பொடி தூவி...' 'பொண்டாட்டியை கடத்திய புருஷன்...' 'கைதுசெய்து' மாமியார் வீட்டில் 'பொங்கல்' வைத்த 'போலீசார்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தன் மீது புகார் அளித்த மாமனாரை பழிவாங்க, மனைவியையே ஆள் வைத்து கடத்திய கணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் பாத்தபஸ்தியில் உள்ள மதாத்டென்க் பகுதியில் வசிக்கும் முகமது சரீப் என்பவர் தனது இளைய மகளான ஆஸ்மா ஷரிப் சயத்துக்கு சல்மான் மீர்ஜா என்பருடன் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார்.

இதையடுத்து, சல்மான் மீர்ஜா தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகனும், மூன்று மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக தம்பதிகளிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனம்வெறுத்த ஆஸ்மா ஷெரிப் தனது தந்தையுடன் சென்று வசித்து வருகிறார்.

இதையடுத்து தனது மகளை கொடுமைப்படுத்திய சல்மான் மிர்ஜா மீது, ஹைதராபாத் காவல்துறை ஆணையரிடம் முகம்மது ஷரிப் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த மருமகன் சல்மான் மிர்ஜா தனது மாமனாருக்கு பாடம் கற்பிக்க நினைத்தார்.

இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு தனது மகளுடன் காரில் சென்று கொண்டிருந்த ஷரிப்பை, தனது சகாக்களுடன் சென்று வழிமறித்து கடுமையாகத் தாக்கியதுடன், அவர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவியுள்ளார். இதையடுத்து, தனது சொந்த மனைவியையே கடத்தி சென்றுள்ளார்.

இதுகுறித்து, முகமது சரீப் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் சல்மான் மீர்ஜா, அவரது நண்பர்கள் என 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்