மனைவியின் ‘பேஸ்புக்’ அக்கவுண்ட்டை பார்த்து மிரண்டுபோன கணவன்.. கோபத்தில் கல்லால் அடித்துக் கொன்ற கொடூரம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபேஸ்புக்கில் மூழ்கி இருந்த காதல் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அயாஜ் அகமது. இவரது மனைவி ரேஷ்மா. இருவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 3 மாதக்குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் நாள் முழுக்க ரேஷ்மா செல்போனில் மூழ்கிக் கிடந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே யதேர்ச்சையாக தனது மனைவியின் செல்போனை எடுத்து அயாஜ் அகமது பார்த்துள்ளார். அப்போது ரேஷ்மாவுக்கு பேஸ்புக்கில் 6,000 ஃபாலோயர்களுக்கு மேல் இருந்ததும், அதில் சிலருடன் சேட்டிங் செய்திருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ரேஷ்மா கோபித்துக்கொண்டு தனது அம்மாவின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதனை அடுத்து தனது கணவருடன் வாழ விருப்பமில்லை என்றும், அதனால் விவாகரத்து வாங்க உள்ளதாகவும் அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த அயாஜ் அகமது, மனைவியிடம் சமாதானம் பேசி மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும் மனைவி கோபமாக இருப்பதால் வெளியே பல இடங்களுக்கு கூட்டிச் சென்றுள்ளார். அப்போது ரேஷ்மா அடிக்கடி செல்போனை எடுத்து சேட்டிங் செய்துகொண்டே இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகமது கான் மனைவியை கழுத்தை நெரித்தும், கல்லால் முகத்தில் அடித்தும் கொலை செய்துவிட்டு சாலையோர புதரில் வீசிவிட்டு சென்றுள்ளார்.
இதனை அடுத்து அந்தவழியாக சென்றவர்கள் சாலையோரம் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதைப் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனை அடுத்து அவர் அடையாளம் காணப்பட்டு சில மணி நேரங்களில் கணவர் அயாஜ் அகமதை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஜாலியா பேசிகிட்டு இருந்த காதலர்கள்'... 'திடீரென கதறிய காதலி, பறந்த குடை'... 'பீச்'சில் நடந்த கொடூரம்!
- 'அயன் சூர்யா ஸ்டைலில் கடத்தல்!!'... 'விமான நிலையத்தில் பரபரப்பு!'...
- அன்னிக்கு தான் ‘ஃபோன்ல’ பேசினோம்... ‘கிளம்பி’ வரதுக்குள்ள... திருமணமான ‘நான்கே’ மாதத்தில் ‘சென்னையில்’ நடந்த சோகம்...
- ‘முதலில் தாய், அடுத்து கூட்டாளி’.. கட்டிலில் வைத்து துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. மகனின் பகீர் வாக்குமூலம்..!
- 'தனியாக இருந்த இளம்பெண்'... 'கன்னத்தில் கீறல்!'... 'சிவந்த நிலையில் கழுத்து!!'... 'காஞ்சிபுரத்தில் பயங்கரம்'...
- ‘ஏறி இறங்கிய டிராக்டர் சக்கரம்’.. கணவர் கண்முன்னே மனைவி பலியான சோகம்..!
- ‘பெண்ணை கட்டிக்கொடுக்க மறுத்த அத்தை’.. நடுராத்திரி இளைஞர் செஞ்ச கொடூரம்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!
- ‘உடன்’ அழைத்துச் செல்லாத ‘கணவர்’... ‘திருமணமான’ ஒரு ஆண்டிற்குள் ‘இளம்பெண்’ செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்...
- பெண்களின் ‘உள்ளாடைகள்’, செருப்புகளைக் ‘குறிவைத்து’... கோவையை ‘பதறவைக்கும்’ சைக்கோ ‘திருடன்’...
- காதலியை ‘நம்பி’ சென்றவருக்கு... ‘இளைஞரால்’ நேர்ந்த ‘பயங்கரம்’... போலீசாரிடம் கொடுத்த ‘அதிர்ச்சி’ வாக்குமூலம்...