'மனைவிய காணோம் சார்.. எங்க போனானே தெரியல'.. சகோதரருடன் சேர்ந்து கணவரின் நடுங்கவைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கல்லேஷ் மற்றும் அவரது மனைவி ஷில்பா (21). இந்த இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில், இருவரும் பெங்களூரின் கொத்தனூர் அருகே உள்ள துர்கா பரமேஸ்வரி லே-அவுட்டில் வசித்து வந்தனர்.
கல்லேஷ் ஒரு ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்திலும், ஷில்பா ஒரு தனியார் தொழிற்சாலையிலும் வேலை செய்து வந்தனர். ஒரு நாள் ஷில்பா திடீரென காணாமல் போய்விட்டதாக கல்லேஷ் போலீஸில் புகார் அளித்தார். ஆனால் அதே சமயம், ஷில்பாவின் பெற்றோர், ஷில்பாவின் கணவர் கல்லேஷ் மீது சந்தேகப்பட்டனர்.
இதனையடுத்து கல்லேஷை போலீஸார் ரகசியமாகக் கண்காணிக்கவும், பின்னர் காவல் துறையின் கஸ்டடியில் விசாரிக்கவும் செய்தனர். அப்போதுதான், ஷில்பா காணாமல் போகவில்லை என்றும், தனக்கு பிடிக்காத வேலைக்கு சென்ற தன் மனைவி, சம்பள பணத்தையும் தன்னிடத்தில் தராமல் வைத்திருந்ததால் ஆத்திரத்தில் தலையணையால் அமுக்கிக் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அதன் பின், கொத்தனூரில் உள்ள ஒரு இடத்தில் தன் அண்ணன் கிருஷ்ணப்பாவின் உதவியோடு மோட்டார் பைக்கில் சென்று ஷில்பாவின் பிரேதத்தை புதைத்ததாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் அண்ணன், தம்பி இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இப்ப என் ஒயிஃப் வருவா'.. 'விட்றாதீங்க.. அப்றம் ஃபிளைட் செதறிடும்'.. பரபரப்பை ஏற்படுத்திய போன் கால்!
- 'கொதிக்கும் எண்ணெய்.. மிளகாய்ப்பொடி.. சுத்தியல்'.. 'ஒருவழியா முடிச்சாச்சு'.. கள்ளக்காதலருடன் சேர்ந்து மனைவி துணிகரம்!
- ‘எங்க வாழ்க்கையை அப்பா சீரழச்சிட்டார்’.. ‘மாணவியின் கடைசி வாட்ஸ் அப் மெசேஜ்’.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்..!
- 'மணமாகி 30 நாளில் கணவரை தீர்த்துகட்டிய நர்ஸ்'.. 3 வருடம் கழித்து .. 'மர்ம மரணம்'.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம்!
- ‘அப்போ உனக்கு உன் புருஷன்தான் முக்கியம்..?’ தவறான நட்பால்.. ‘பெண்ணுக்கு நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்..’
- 'இத ஒழுங்கா ஃபாலோ பண்ணுங்க'... 'இல்லன்னா 'பெட்ரோல்' கிடையாது'... பெட்ரோல் பங்குகள் அதிரடி !
- 'இப்படி நடக்கும்னு நெனைக்கலயே'.. 'கணவரை பயமுறுத்த முயன்ற மனைவி'.. திருமணம் ஆகிய ஒரு வருடத்தில் சோகம்!
- ‘கர்ப்பத்தை கலச்சிரு’.. ‘மறுத்த இளம்பெண்’.. கள்ளக்காதலால் நடந்த விபரீதம்..! வெளியான திடுக்கிடும் தகவல்..!
- பணம் இல்லாமல்.. ‘மனைவியை வைத்து சூதாடிய கொடூரம்..’ தோற்ற கணவன் செய்த.. ‘பதைபதைக்க வைக்கும் காரியம்..’
- 'ஆஹா.. இது வேற மாதிரில்ல போகுது'.. விமானத்தில் கணவர் செய்த காரியம்.. பணிப்பெண் எடுத்த 'பலே' முடிவு!