“என்ன? நான் சொல்ற கட்சிக்கு ஓட்டு போடமாட்டியா?”.. மனைவிக்கு கணவரின் கொடூர தண்டனை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தன்னுடைய ஆதரவு நிலைப்பாடு உள்ள கட்சிக்கு ஓட்டு போடாத, தன் மனைவியின் மீது ஆத்திரம் கொண்ட கணவர் ஒருவர் மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றியுள்ள சம்பவம் கொல்கத்தாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

7 கட்டங்களாக இந்தியாவில் நடந்த மக்களவைத் தேர்தல், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ஆட்சி செய்துவரும் மேற்கு வங்கத்திலும் ஏப்ரல் 11-ம் தேதி நிகழ்ந்தது. அப்போது யாருக்கு ஓட்டு போடுவது என்கிற விவாதங்கள் அங்கு எழுந்தன. இதில்தான், முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அன்சூரா பீபி எனும் பெண்மணியின் கணவர், தன் மனைவியை தன்னுடைய ஆதரவு நிலைப்பாட்டு கட்சியாக இருக்கும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கச் சொல்லி வலியுறுத்திள்ளார்.

எனினும் அன்சூரா, தனது கணவரின் இந்த நிலைப்பாட்டுக்கு, அதாவது தன்னையும் அவர் விரும்பும் கட்சிக்கே ஓட்டுப்போடச் சொல்லும் அதிகாரப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனை சற்றும் பொறுத்துக்கொள்ளாத அந்தக் கணவர், தனது மனைவி தன் பேச்சைக் கேட்டு தான் சொல்லும் கட்சிக்கு ஓட்டுப் போடாததால், அவரை அடித்து துன்புறுத்தியதோடு, மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றி கொடுமைப்படுத்தியுள்ளார்.

உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அன்சூரா, தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். இதனிடையே தனது தாயாரின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அடித்ததாகவும், பின்னர் தன் தாயாரின் வாயில் ஆசிட் ஊற்றி தன் தந்தை கொடுமை செய்துள்ளதாகவும், தன் தந்தை மீது அன்சூராவின் மகன் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அந்த அன்சூராவின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LOKSABHAELECTIONS2019, ELECTIONS, VOTE, BIZARRE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்