‘3 வேளையும் அதே சாப்பாடா..?’ கோபத்தில் மனைவியை விவாகரத்து செய்த கணவன்.. அப்படியென்ன உணவு அது..?
முகப்பு > செய்திகள் > இந்தியாமூன்று வேளையும் நூடுல்ஸ் சமைத்து கொடுத்ததால் மனைவியை கணவர் விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மைசூரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி எம்.எல். ரகுநாத் கூறுகையில், ‘பெல்லாரி மாவட்ட நீதிமன்றத்தில் சிறிய பிரச்சனைக்காக ஒரு தம்பதி விவாகரத்து கேட்டு வந்தது. விவாகரத்து கேட்ட கணவர், தனது மனைவிக்கு நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சமைக்கத் தெரியவில்லை கூறினார்.
காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் நூடுல்ஸ் மட்டுமே சமைத்து கொடுக்கிறார். தனது மனைவி கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றால் கூட, வெறும் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை மட்டுமே வாங்கிக் கொண்டு வருகிறார் என்று குற்றம் சாட்டினார். இந்த வழக்கை நாங்கள் மேகி வழக்கு என்று குறிப்பிட்டுள்ளோம். இருவரும் மனம் ஒத்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர் என்கிறார்’ என நீதிபதி எம்.எல். ரகுநாத் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘பொதுவாக தம்பதிகள் விவாகரத்து வரை வந்து சேர்வது தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருதி மட்டுமே. தம்பதியை ஒன்று சேர்க்க, இதுபோன்ற உணர்வுப்பூர்வ விஷயங்களை நாங்கள் கையிலெடுப்போம். இது பெரும்பாலும் உடல்ரீதியானது அல்ல மன ரீதியிலானதுதான். 800 முதல் 900 விவாகரத்து வழக்குகளில் வெறும் 20-30 வழக்குகளில் மட்டுமே ஒன்று சேர்வார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளன. ஒரு ஆண்டு வரையிலாவது தம்பதிகள் ஒன்றாக சேர்ந்து வந்தால் மட்டுமே விவாகரத்துக் கோரி வழக்குத் தொடர முடியும். அந்த சட்டம் மட்டும் இல்லையென்றால், திருமண மண்டபத்திலிருந்து நேராக விவாகரத்துக் கேட்டு நீதிமன்றதுக்கு வந்துவிடுவார்கள். திருமணம் முடிந்த அடுத்த நாளே கூட விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய தம்பதியை பார்த்திருக்கிறோம்.
பிரச்சனை குறித்து வாழ்க்கை துணையுடன் பேசாமல், நேராக நீதிமன்றத்துக்கு வந்துவிடுகிறார்கள். திருமணத்தின் போது அணிந்திருந்த ஆடையின் நிறம் மோசமாக இருந்தது, மனைவியை வெளியே அழைத்துச் செல்லவில்லை போன்ற சின்ன சின்ன காரணங்களுக்காக கூட விவாகரத்துக் கேட்கிறார்கள்.
இதில், குடும்பத்தினர் பார்த்து வைத்த திருமணம், காதல் திருமணம் என்றெல்லாம் எந்த வேறுபாடும் இல்லை. கிராம பகுதிகளை விடவும், நகரப் பகுதிகளில் விவாகரத்து அதிகம் பதிவாகிறது. காரணம், ஊரகப் பகுதிகளில் பெண்கள் பெரிய அளவில் வருவாய் ஈட்ட முடியாமல் இருப்பதும், குடும்ப உறுப்பினர்களுக்காக சகித்துக் கொண்டு வாழ்வதும் காரணமாக இருக்கின்றன. ஆனால் நகரப் பகுதிகளில் பெண்கள் நன்கு படித்து வேலைக்கு செல்வோராக இருப்பதும் காரணமாக உள்ளது’ என நீதிபதி எம்.எல். ரகுநாத் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கிச்சனில் பிசியாக சமைத்துக் கொண்டிருந்த மனைவி.. "வேக வேகமாக அங்கு வந்த கணவர்.." பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!
- "எவ்வளவு அடிச்சாலும் தாங்குறேன்னு அடி பிண்றா ஐயா".. கதறிய கணவர்.. கலங்கிப்போன நீதிமன்றம்.. நீதிபதி போட்ட உத்தரவு..!
- 8 ஆண்டுகள் தலைமறைவு.. சிக்கன் பக்கோடாவால் சிக்கிய கணவன்.. சென்னையை பரபரப்பாக்கிய வழக்கு..!
- கல்யாணமானதுல இருந்தே கணவரின் கொடுமை.. நாட்டையே உலுக்கிய விஸ்மயாவின் முடிவு.. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?
- "இதுக்கு மேலயும் அவ தாங்கிக்க மாட்டா.." யாசகம் செய்து சேர்த்த பணத்தில்.. கணவர் கொடுத்த அன்பு பரிசு..
- 2 நாளா அப்பா போனை எடுக்கல.. போலீஸுடன் வீட்டுக்கு வந்த மகள்..கதவை உடைச்சுக்கிட்டு உள்ள போனவங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
- ‘3 நாளா வீட்டுக்கு வரல.. எங்க தேடியும் கிடைக்கல’.. கணவரை தேடிய மனைவிக்கு காத்திருந்த சோகம்..!
- ‘தலை, கழுத்தில் காயம்’.. மனைவியின் மரண வழக்கில் 3-வது கணவர் பரபரப்பு வாக்குமூலம்..!
- "ஒழுங்கா சேலை கட்டத் தெரியல".. மனைவி மீது வந்த கோபம்.. லெட்டர் எழுதி வச்சுட்டு கணவர் செஞ்ச விபரீத காரியம்..!
- "நூடுல்ஸ இப்டியும் பண்லாமா??.." மசாலா, மேகிய சேர்த்து".. அப்றம் அதோட... வைரல் வீடியோ