மாமனாருடன் ஒரே அறையில் இருந்த மனைவி.. கையும் களவுமாக பிடித்த கணவன்.. கடைசியில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதன் மனைவியுடன் தகாத உறவில் இருந்த அப்பாவை கையும் களவுமாக பிடித்த மகனுக்கு நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்திலுள்ள பெஹ்ரூர் பகுதியை சேர்ந்தவர் விக்ரம் சிங். இவரது மனைவி பூஜா. இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த சூழலில் பூஜாவுக்கும், விக்ரம் சிங்கின் தந்தை பல்வந்த் சிங்குக்கும் (வயது 64) தகாத உறவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
மருமகளுடன் தகாத உறவு
அதனால் விக்ரம் சிங் வீட்டில் இல்லாத நேரத்தில் பல்வந்த் சிங்கும், பூஜாவும் தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை விக்ரம் சிங் ஒரு நாள் இரவு கையும் களவுமாக பிடித்துள்ளார். அப்போது தனது தந்தையையும், மனைவியையும் அவர் கண்டித்துள்ளார். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கம் என மகன் விக்ரம் சிங்கை தந்தை பல்வந்த் சிங் கொன்றுள்ளார். பின்னர் விக்ரம் சிங்கே தனது உயிரை மாய்த்துக் கொண்டதுபோல் மின்விசிறியின் அவரது உடலை தொங்கவிட்டு நாடகமாடி உள்ளனர்.
கையும் களவுமாக பிடித்த மகன்
இதுகுறித்து தெரிவித்த கூடுதல் எஸ்.பி பிபின் குமார், ‘கடந்த மார்ச் 5-ம் தேதி இரவு பல்வந்த் சிங்கையும், மனைவி பூஜாவையும் விக்ரம் சிங் கையும் களவுமாக பிடித்துள்ளார். இதனால் தங்களது விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என விக்ரமை கொன்று மின்விசிறியில் தூக்கிட்டதுபோல் தொங்கவிட்டுள்ளனர். மறுநாள் காலை தனது மகன் உயிரை மாய்த்துக் கொண்டதாக குடும்பத்தினரிடம் அழுதுகொண்டே கூறி நாடகமாடி உள்ளனர். இதனை அடுத்து இறுதிச் சடங்குகளை செய்ய குடும்பத்தினர் விரைந்துள்ளனர்.
மாமனார்-மருமகள் கைது
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து விக்ரம் சிங்கின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரது உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து பூஜாவையும், அவரது மாமனார் பல்வந்த் சிங்கையும் போலீசார் விசாரித்தனர் அப்போது இந்த உண்மை தெரியவந்துள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மருமகள் மற்றும் மாமனார் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
“நானும் 2 குழந்தைக்கு தகப்பங்க”.. நான் எப்படி ‘அந்த’ காரியத்தை செய்வேன்.. உக்ரைன் அதிபர் உருக்கம்..!
தொடர்புடைய செய்திகள்
- "'தோனி' மனைவியா இருக்குறதால படுற கஷ்டம்.." மனம் திறந்த சாக்ஷி.. "இந்த ஒண்ணு தான் ரொம்ப கொடுமை"
- “Room-ல வெச்சு பூட்டி.. Toilet தண்ணிய குடிக்க சொல்லி”.. பரபரப்பை கிளப்பிய இளம் பெண்ணின் ‘இன்ஸ்டா’ பதிவு..!
- சாப்பிட கூப்பிட்டும்.. கண்டுக்காம இருந்த கணவன்.. கோவத்துல மனைவி செஞ்ச பகீர் காரியம்.. சென்னையில் பரபரப்பு..!
- மனைவி உக்ரைன் பதுங்கு குழியில்.. கணவர் இன்னொரு நாட்டில் பணய கைதி.. புதுமண தம்பதிக்கு நேர்ந்த துயரம்
- தினமும் குடிச்சிட்டு வந்து ஒரே தொல்லை.. வீட்டில் கேட்ட கணவனின் அலறல் சத்தம்.. மனைவி செய்த பரபரப்பு காரியம்..!
- தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவர்.. விபரீத முடிவெடுத்த மனைவி.. கோபத்தில் டிராக்டர் எடுத்துக்கிட்டு காதலன் செஞ்ச காரியம்..!
- புருஷன் போலீசில் சிக்கிட்டா நாம ஜாலியா இருக்கலாம்.. பெண் போட்ட மாஸ்டர் பிளான்.. சிக்கியது எப்படி?
- முதல் கணவரை பாக்க ஆசைப்பட்ட மனைவி.. கிச்சனில் இருந்து வேகமாக வந்த 2வது கணவர்.. பதைபதைப்பு சம்பவம்
- விவகாரத்து நோட்டீஸ்ல கையெழுத்து போட மாட்டேன்.. மறுத்த மனைவியை தாக்கிய கணவன்.. தடுக்க வந்த மகளுக்கு நேர்ந்த கொடுமை..!
- "கல்யாணம் பண்ணிக்குறியா இல்லியா??.." நைசாக நழுவ பார்த்த காதலன்.. கட்டையுடன் களத்தில் இறங்கிய காதலி