‘சூட்கேஸில் மனைவி சடலம்’.. ஏரியில் தேடிய போலீசார்.. சிக்கிய சாஃப்ட்வேர் இன்ஜினீயர்.. திடுக்கிட வைத்த பின்னணி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மனைவி விவகாரத்து தராததால் கணவன் செய்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கோரலகுண்டா பகுதியை சேர்ந்த திருமலா ஆச்சாரி-மல்லிகா தம்பதியினரின் மகள் பத்மா. இவருக்கு சத்திய நாராயணபுரம் பகுதியை சேர்ந்த பாண்டுரங்கா ஆச்சாரி-ராணி தம்பதியினரின் மகன் சாஃப்ட்வேர் இன்ஜினீயரான வேணுகோபால் என்பவருடன் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த 4 மாதத்தில் பத்மாவை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு வெளியே செல்வது என வேணுகோபால் கொடுமைப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. கணவர் கொடுமை தாங்க முடியாமல் விவாகரத்து பெற பத்மா முடிவு செய்துள்ளார். ஆனால் பத்மாவின் பெற்றோர் அவரை சமாதானம் செய்து கணவருடன் சேர்த்து வைத்து வந்தனர்.

இந்த சூழலில் கணவர் வேணுகோபால் கொடுமைகள் எல்லை மீறவே, கடந்த ஆண்டு மீண்டும் தாய் வீட்டுக்கு பத்மா வந்தார். இதனை அடுத்து விவாகரத்து கோரி வேணுகோபால் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பத்மாவை வேணுகோபால் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு சமாதானம் செய்து அழைத்து சென்றுள்ளார்.

இதை நம்பி பத்மா மீண்டும் கணவர் வேணுகோபாலுடன் சென்றுள்ளார். அப்போது பத்மாவிடம் விவாகரத்து தரக்கோரி வேணுகோபால் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் இதற்கு பத்மா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வேணுகோபால், அவரது தந்தை பாண்டு ரங்காச்சாரி, தாய் ராணி மற்றும் நண்பர் சந்தோஷ் ஆகியோருடன் இணைந்து பத்மாவை அடித்துக் கொன்றுள்ளனர்.

பின்னர் உடலை சூட்கேசில் அடைத்து போர்வையால் கட்டி காரில் எடுத்து சென்று திருப்பதி ரேணிகுண்டா அருகே உள்ள ஏரியில் வீசுயுள்ளனர். இந்த சமயத்தில் பத்மாவின் பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு மகள் பற்றி விசாரித்த போதெல்லாம் அவர் நலமாக இருப்பதாக வேணுகோபால் கூறியுள்ளார். இப்படி 5 மாத காலமாக பத்மாவின் பெற்றோரை நம்ப வைத்தார்.

இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் வந்துள்ளது. இதற்கு கணவன், மனைவி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், வேணுகோபால் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது மகள் பத்மா குறித்து விசாரித்தபோது, வேணுகோபால் முன்னுக்குபின் முரணமாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பத்மாவின் பெற்றோர், தங்களது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் கணவர் வேணுகோபாலிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மனைவியை அடித்துக் கொன்று ஏரியில் வீசியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வேணுகோபாலை அழைத்து சென்ற போலீசார், அவர் அடையாளம் காட்டிய ஏரியின் பகுதியில் நீச்சல் வீரர்கள் உதவியுடன் பத்மாவின் சடலத்தை போலீசார் மீட்டனர். இதனை அடுத்து வேணுகோபால், அவரது தந்தை மற்றும் தாய் ஆகியோரைக் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள நண்பர் சந்தோஷ் தீவிரமாக தேடி வருகின்றனர்.

TECHIE, HUSBAND, WIFE, ANDHRAPRADESH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்