கர்நாடகாவைச் சேர்ந்த இயற்பியல் பேராசிரியர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ரோபோவை வடிவமைத்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
ரோபோ
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் மனிதகுலம் மகத்தான சாதனைகளை படைத்து வருகிறது. ஒரு காலத்தில் பிரம்மாண்டம் என கருதப்பட்ட பல விஷயங்களை தற்போது அசால்ட்டாக அறிவியலின் உதவியுடன் நம்மால் செய்து விட முடிகிறது. இத்தகைய வளர்ச்சியினை கல்வி கற்கும் மாணவர்களிடத்திலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என உலக அளவில் பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கர்நாடகாவைச் சேர்ந்த இயற்பியல் பேராசிரியர் ஒருவர் பாடம் சொல்லிக் கொடுக்கும் ரோபோவை வடிவமைத்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
ஆன்லைன் கல்வி
சிக்ஷா என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ பள்ளி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறது. மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் முறை சமீப ஆண்டுகளில் பல விதங்களில் மாற்றத்தை சந்தித்திருக்கிறது. குறிப்பாக கொரோனா சமயத்தில் ஆன்லைன் மூலம் கல்வி கற்றல் பரவலாக நடைபெற்றது. இத்தகைய ஸ்மார்ட்டான கற்பித்தல் பணிகள் ஒருபுறம் தீவிரமடைந்து வரும் நிலையில் மாணவர்களுக்கு எளிதான மற்றும் அதே நேரத்தில் வித்தியாசமான அனுபவத்துடன் பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையை உருவாக்க விரும்பி இருக்கிறார் பேராசிரியர் அக்ஷய் மஷேல்கர்.
Images are subject to © copyright to their respective owners.
இவர் உருவாக்கியுள்ள இந்த சிக்ஷா ரோபோ தற்போது ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு புதுமையான வழியில் பாடம் சொல்லிக் கொடுக்கிறது. நான்காம் வகுப்பு வரையில் இந்த ரோபோவால் பாடம் நடத்த முடியுமாம். அரசு பள்ளி மாணவியை போலவே சீருடை அணிந்து கொண்டு மிக எளிமையான வடிவில் காட்சியளிக்கிறது இந்த ரோபோ.
Images are subject to © copyright to their respective owners.
வாழ்த்து
இது குறித்து பேசியுள்ள பேராசிரியர் அக்ஷய்," ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கும் முறை ஈர்க்கும் விதமாக இல்லை என உணர்ந்தேன். அதன் காரணமாகவே இந்த ரோபோவை வடிவமைத்தேன். இது நவீன தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்ட ரோபோ அல்ல. ஊரகப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே நிலவும் கல்வி சார்ந்த இடைவெளியை குறைக்கும் நோக்கில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது" என தெரிவித்திருக்கிறார். இதனிடையே மாணவர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் நோக்கில் பாடம் சொல்லிக் கொடுக்கும் ரோபோவின் வடிவமைத்த பேராசிரியர் அக்ஷய்க்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இந்த ரோபோவின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ஆர்டர் செஞ்ச ஐ போன் வாங்க காசில்ல".. டெலிவரி செய்ய வந்த ஊழியருக்கு இளைஞரால் நேர்ந்த கொடூரம்.. கதிகலங்கிய கர்நாடகா!!
- கர்நாடக வனத்துறையினர் சுட்டதில் தமிழக மீனவர் மரணம்.. இருமாநில எல்லையில் பரபரப்பு.. போக்குவரத்து நிறுத்தமா?
- "எல்லாம் பசங்களுக்காக தான்".. 12 வருசமா அரசு பள்ளி ஆசிரியர் செய்து வரும் அசத்தலான காரியம்.. குவியும் பாராட்டு!!
- Vibe ஆன ரியல் மலர் டீச்சர்.. .. மாணவர்களுக்கே டஃப் கொடுத்த டான்ஸ்..!. வீடியோ
- மீண்டும் பள்ளி, கல்லூரி & சினிமா தியேட்டர்களில் மாஸ்க் கட்டாயம்.. கர்நாடக அரசு வெளியிட்ட நெறிமுறைகள்!
- P.E.T பீரியடில் வேறு பாடம் நடத்துவதா?.. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்.. குஷியில் மாணவர்கள்..!
- இயற்கை கழிவுகளிலிருந்து அவதார் கேரக்டர் பொம்மைகள்.. மாஸ் காட்டிய அரசுப்பள்ளி மாணவர்கள்..! Avatar The Way Of Water
- பெத்த மகனுக்கே ஸ்கெட்ச்.. கரும்பு தோட்டத்தில் இருந்த 6 பேர்.. அப்பா செஞ்ச குலை நடுங்கும் காரியம்..!
- 1 லட்ச ரூபாய் டீல் பேசி கணவருக்கு ஸ்கெட்ச்.. காதலன் போட்டு குடுத்த பிளான்... வசமாக சிக்கிய மனைவி!!.. திடுக்கிடும் பின்னணி!!
- பேஸ்புக்கில் கீர்த்தி சுரேஷ் ஃபோட்டோ வைத்து இளைஞரிடம் 40 லட்சம் மோசடி.. பலே திட்டம் போட்ட கணவன் மனைவி! கைது செய்யப்பட்ட பிண்ணனி