'4 பேரையும் அநியாயமா கொன்னுட்டாங்க'...'இதுக்கு கொண்டாட்டமா?...கொதித்த மனித உரிமை ஆர்வலர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹைதராபாத் நகரில் பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வரும் நிலையில், இது இரக்கமற்ற படுகொலை என மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ட்விட்டரில் என்கவுன்டர் குறித்து பல ஹாஷ்டேகுகள் ட்ரெண்டிங்யில் உள்ளன. இதற்கு மூளையாக செயல்பட சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்னாருக்கு பாராட்டுகள் குவித்த வண்ணம் உள்ளது. அவர் குறித்த தகவல்கள் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் இது கொண்டாட வேண்டிய விஷயமில்லை, 4 உயிர்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ஐதராபாத்தை சேர்ந்த சட்டத்துறை பேராசிரியரான கல்பனா, ''நான்கு பெரும் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டுள்ளனர். இதுதான் நீதியா? நீதிமன்றத்தை மூடிவிட்டு இதுபோன்ற என்கவுண்டர்களை பார்க்க வேண்டுமா?. மேலும் என்கவுன்டர்களின் மூலம் நீதியை நிலைநாட்ட முடியாது" என கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.
மேலும் தமிழகத்தை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி டிஃபே, ''இம்மாதிரியான என்கவுன்டர்கள் பெண்களின் பாதுகாப்பை எந்த வகையிலும் உறுதி செய்யாது. டெல்லி வழக்கில் நாம் கோவத்துடன் செயல்பட்டு சட்டத்தின்மூலம் நீதி பெற்றோம். ஆனால் தற்போது என்கவுன்டர் செய்தது மூலம் நாம் பின்னோக்கி சென்றுள்ளோம்" என்று அவர் கூறினார்.
இதற்கிடையே தேசிய மனித உரிமைகள் ஆணையம், மீடியா செய்திகள் அடிப்படையில் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உள்ளது. மேலும் உண்மை கண்டறியும் குழுவை என்கவுண்டர் நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்க மனித உரிமைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- குற்றவாளிகளுக்கு 'மரணதண்டனை' உறுதி.. நேற்றிரவே 'க்ளூ' கொடுத்த போலீஸ்!
- 'நீ கவலை படாத பா'...'நான் வளர்ந்து அவனுங்கள'...'சீரியஸ் ஆன சுட்டி பையன்'...அனல் தெறிக்கும் வீடியோ!
- ‘ரயில் முன்’ சிக்கிய பயணி.. ‘தன் உயிரையும்’ பொருட்படுத்தாமல் காவலர் செய்த காரியம்.. ‘நூலிழையில்’ தவிர்க்கப்பட்ட ‘பயங்கரம்’..
- 'சூப்பர் சார்.. இப்பதான் எங்களுக்கு ஆறுதலா இருக்கு!'.. பேருந்தில் இருந்தபடி மாணவிகள் செய்த காரியம்.. சிலிர்க்கவைக்கும் வீடியோ!
- ‘4 பேர் என்கவுண்டர் சம்பவம்’! ‘சல்யூட் அடித்த பெண்’.. தோளில் தூக்கி கொண்டாடிய மக்கள்..!
- ‘பெண் மருத்துவர் கொலையில்’... ‘குற்றவாளிகள் 4 பேர் என்கவுண்ட்டர்’... 'பெண் அரசியல் தலைவர்கள் கருத்து’!
- ‘இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்’! ‘4 பேர் என்கவுண்டர் சம்பவம்’.. பெண் மருத்துவரின் தங்கை உருக்கம்..!
- 'இவருக்கு இது புதுசு இல்ல'...'ஆசிட் அடித்தவர்களுக்கு என்கவுன்ட்டர்'...யார் இந்த 'சஜ்ஜனர் ஐபிஎஸ்'?
- ‘4 பேரும் என்கவுண்ட்டரில் சுட்டு கொலை’... ‘பெண் மருத்துவரின்’... ‘தந்தை உருக்கமான வார்த்தை’!
- 'ஆரம்பித்த இடத்தில் முடிந்த கதை'...'என்கவுன்ட்டர்' நடந்தது எப்படி'?...வெளியான பரபரப்பு தகவல்கள்!