'விவாதத்துக்கு கூப்பிட்டா'...'நேரலையில் நடந்த அதிர்ச்சி'...'வறுத்தெடுத்த நெட்டிசன்கள்'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஜொமோட்டோ பிரச்னை தொடர்பான விவாதத்துக்கு அழைக்கப்பட்ட நபர், நேரலையில் நடந்து கொண்ட விதம் தற்போது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

ஜொமோட்டோவில் உணவு ஆர்டர் செய்த அமித்சுக்லா என்ற நபர், உணவைக் கொண்டுவரும் டெலிவரி பாய் ஒரு இஸ்லாமியர் என்பதால், அவர் இல்லாமல் வேறு ஒருவர் உணவை டெலிவரி செய்ய வேண்டும் என ஜொமோட்டோவிடம் கோரினார். ஆனால் ‘உணவுக்கு எந்த மதமும் இல்லை’ எனத் தெரிவித்த ஜொமோட்டோ, டெலிவரி ஆளை மாற்ற முடியாது என தெரிவித்தது. இந்நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனைத்தொடர்ந்து சுக்லாவுக்கு அம்மாநில காவல்துறை நோட்டீஸும் அனுப்பியது.

இதனிடையே நியூஸ் 24 என்ற தொலைக்காட்சியில் இந்த பிரச்சனை தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில் 'ஹிம் ஹிந்து' என்ற அமைப்பின் நிறுவனர் அஜய் கெளதம் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அப்போது விவாதத்தின் நடுவே ''காலித்'' என்ற இஸ்லாமிய தொகுப்பாளர் தோன்றி, அந்த பகுதியினைத் தொகுத்து வழங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது கண்களை மூடிக் கொண்ட அஜய் கெளதம் ''இஸ்லாமிய தொகுப்பாளரை பார்க்க மாட்டேன்'' என கூறினார். நேரலையில் நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் அஜய் கெளதமின் செயலுக்கு பதிலளித்துள்ள நியூஸ் 24-ன் தலைமை எழுத்தாளர் அனுராதா பிரசாத் ''நியூஸ் 24 தொலைக்காட்சியின் செய்தி அறையில், அஜய் கௌதம் கண்டிக்கத்தக்க வகையில் நடந்துகொண்டதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். பத்திரிகை நெறிமுறையின்படி இத்தகைய செயலுக்கு ஆதரவளித்து மேடை அளிக்க அனுமதிக்க முடியாது. அஜய் கௌதமை இனிமேல் அழைப்பதில்லை என நியூஸ் 24 முடிவு செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

HUM HINDU, AJAY GAUTAM, MUSLIM ANCHOR, NEWS24, ZOMATO, KHALID

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்