2 மூட்டை 'அரிசியுடன்' சென்னை டூ ஆந்திரா... 'இந்திய' கடற்படை கண்ணில் சிக்காமல்... 1000 கி.மீ கடலில் 'பயணித்து' மிரளவைத்த தொழிலாளர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

முதல்முறை ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது வட இந்தியாவை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் கால்நடையாக பயணித்து மிரள வைத்தனர். இதனால் கடும் சர்ச்சைகள் எழுந்தது. இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய மத்திய அரசு அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தங்க வைத்தனர். தற்போது மாநில அரசுகள் அவர்களுக்கான உணவுகளை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 2-ம் கட்ட ஊரடங்கில் சென்னை-ஆந்திரா கடல்வழியாக 1080 கிலோ மீட்டர் பயணித்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஊருக்கு சென்றுள்ளனர். இந்த தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் மிரள வைத்துள்ளது.

சென்னையில் தங்கியிருந்த ஒடிசா, ஆந்திரா தொழிலாளர்கள் 27 பேர் ஆளுக்கு 7 ஆயிரம் ரூபாய் பணம் போட்டு சுமார் 1.73 லட்சம் பணத்துக்கு பழைய படகு ஒன்றை வாங்கி அதில் 2 மூட்டை அரிசி, 1 கிலோ தக்காளி, சிலிண்டர், 300 லிட்டர் டீசல், 350 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு படகில் புறப்பட்டு உள்ளனர்.

இந்திய கடற்படை கண்ணில் சிக்காமல் அவர்கள் அனைவரும் சுமார் 5 நாட்கள் கடல் வழியாக பயணித்து ஒடிசா-ஆந்திரா எல்லைப்பகுதியை அடைந்துள்ளனர். அங்கு அவர்களை பார்த்த போலீசார் அவர்களை விசாரணைக்குப்பின் தனிமைப்படுத்தி இருக்கின்றனர். இவர்களில் 10 பேர் ஒடிசா மாநிலத்தையும், 17 பேர் ஆந்திராவையும் சேர்ந்தவர்கள் என்பது குறிபிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்