‘கொரோனா வைரஸ் பாதிப்பு’... ‘சுற்றுலாப் படகு இல்லங்களையும்’... 'கேரள அரசின் அடுத்த அதிரடி திட்டம்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை வழங்க ஆழப்புழாவில் உள்ள படகு வீடுகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் கேரளாவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அரசின் ஒழுங்குமுறை, சமூக விலகல் நடவடிக்கை போன்றவற்றால் கொரோனா தொற்று அதிக அளவான 2-ல் இருந்து குறைந்த அளவான 9-வது இடத்திற்கு சென்றது. மேலும் கேரளாவின் நடவடிக்கைகளால் பாதிப்பு விகிதம் குறைந்ததாக உலக நாடுகள் கேரளாவை பாராட்டி வருகின்றன.

இந்நிலையில், கேரளாவில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆழப்புழாவில் வீடுகள் போன்றே இருக்கும் சுற்றுலா படகு வீடுகளை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் வார்டாக மாற்ற அரசு முடிவு செய்தது. இதுகுறித்து ஆழப்புழா மாவட்ட கலகெ்டர் அஞ்சனா கூறுகையில், ஆலப்புழா மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொற்றால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் இங்குள்ள நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகளை தனிமை வார்டுகளாக பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். தேவைப்பட்டால் ஆழப்புழாவில் உள்ள படகு வீடுகளையும் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த உள்ளோம். இதற்கு படகு உரிமையாளர்களும் சம்மதம் தெரிவித்தனர். படகு வீடுகள் மூலம் ஒரே நேரத்தில் 1500 முதல் 2 ஆயிரம் பேர் வரை தனிமைப்படுத்தி தங்க வைக்க முடியும்’ இவ்வாறு அவர் கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்