'ஆக்சிடன்ட்' நடக்குறதுக்கு கொஞ்சம் முன்னாடி பார்ட்டியில 'சண்டை' நடந்துச்சு...! 'பின்னாடி follow பண்ணி வந்த கார்...' 'அதிர' வைக்கும் திருப்பங்கள்...! - நடந்தது என்ன...?
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் பிரபல மாடல்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தில், பார்ட்டி நடந்த ஹோட்டல் உரிமையாளரை கைது செய்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கேரளாவின் பிரபல மாடலான ஆன்சி கபீர் கடந்த 2019-ஆம் ஆண்டில் மிஸ் கேரளா பட்டம் பெற்றவர். அதே வருடம் இரண்டாம் இடத்தை பெற்றவர் அஞ்சனா சாஜன் . இருவரும் நெருங்கிய தோழிகள். ஆன்சி கபீர் திருவனந்தபுரம் அருகிலுள்ள ஆற்றங்கல் பகுதியை சேர்ந்தவர். அஞ்சனா திருச்சூர் மாநிலத்தை சேர்ந்தவர். இவர்களின் நண்பர்கள் முகமது ஆசிஷ் (25), டிரைவர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் ஒரு காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கொச்சி அருகே விபத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த கொடூர விபத்தில், ஆன்சி கபீர், அஞ்சனா ஆகியோர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர். முகமது ஆசிஷும் டிரைவர் அப்துல் ரஹ்மான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு முகமது ஆசிஷ் உயிரிழந்தார். படுகாயங்களுடன் சிகிச்சை பெற்ற ரஹ்மான், குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததுதான் காரணம் என்று முதலில் சொல்லப்பட்டது. பிறகு அவரை போலீசார் உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த காவல் துறையினருக்கு நாளுக்கு நாள் திடுக்கிடும் தகவல்கள் வந்துகொண்டே இருந்தன. இவர்களுடன் சேர்ந்து ஆறுபேர் கொச்சியில் உள்ள என்ற ஓட்டலில் நடந்த பார்ட்டியில் கலந்துக் கொண்டனர். அப்போது அங்கு சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளனர். மாடல்கள் வந்த காரை, இன்னொரு கார் பின்னால் தொடர்ந்து வந்துள்ளது. அந்த காரை சைஜு தங்கச்சன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
மாடல்கள் வந்த கார் விபத்தில் சிக்கியதும் பின்னால் வந்த காரில் இருந்தவர்கள், ஹோட்டல் உரிமையாளர், ராய் ஜோசப் வயலட்டுக்கு போன் பண்ணி தகவலை தெரிவித்துள்ளனர். அவர்கள் எதற்காக மாடல்களைப் பின் தொடர்ந்து வந்தார்கள் என்பதும் ஹோட்டல் உரிமையாளருக்கு ஏன் சொன்னார் என்பது புரியாத புதிராக உள்ளது.
இதையடுத்து அந்த விழாவில் கலந்துக்கொண்டவர்களை அழைத்த காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர். பார்ட்டி நடந்த போது எடுக்கப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஹோட்டல் உரிமையாளர் ராய் ஜோசப் அழித்துவிட்டதாகத் கூறியுள்ளார். இதனால் அவரையும் ஓட்டல் பணியாளர்கள் 5 பேரையும் கைது செய்துள்ள போலீசார், தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வழக்கை பிஜி ஜார்ஜ் தலைமையிலான குற்றப் பிரிவு போலீசார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே மாடல்கள் வந்த பின் தொடர்ந்து வந்த காரை ஓட்டி வந்த சைஜு தங்கச்சன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் காரணமாக, இந்த வழக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் மேலும் பல மர்மங்கள் விரைவில் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அவரு மேல இடிச்சிட கூடாதேன்னு...' 'திடீர்னு கார திருப்பினப்போ...' 'ஒரே செகண்ட்ல எல்லாம் முடிஞ்சு போச்சு...' - ஒரே நாளில் 'மிஸ் கேரளா' ஆன அழகிகளின் சோக முடிவு...!
- 'கோவா ட்ரிப் முடிந்து வீட்டுக்கு வந்த நேரம்'... 'போன வேகத்தில் பல்டி அடித்து கவிழ்ந்த கார்'... 'வெளிய எடுக்கும் போது தான் தெரியும்'... உள்ள இருந்தது இவங்களா'?
- 'Audi கார்ல எப்படி ஏர் பேக் வேலை செய்யாம போச்சு'?... 'சுக்குநூறாக தெறித்த கார்'... 'தி.மு.க. எம்.எல்.ஏ மகனுக்கு நேர்ந்த பரிதாபம்'... CCTV காட்சிகள்!
- நடிகை யாஷிகா கார் விபத்து!.. சம்பவதன்று இரவு என்ன நடந்தது?.. ஆண் நண்பர் பரபரப்பு வாக்குமூலம்!
- கைதாவாரா யாஷிகா?.. வேகமெடுக்கும் விசாரணை!.. பரபரப்பை கிளப்பும் காவல்துறையின் அடுத்தடுத்த நடவடிக்கைகள்!
- 'ஸ்பீடா போனத விட... நடிகை யாஷிகா செய்த 'இந்த' தவறு தான்... விபத்துக்கு முக்கிய காரணம்'!.. காவல்துறை விசாரணையில் 'மேஜர் ட்விஸ்ட்'!!
- பவணிக்கு இப்போ எப்படி இருக்கு...? 'இறந்த தோழியைப் பற்றி கேட்ட யாஷிகா ஆனந்த்...' - மகளின் 'உடல்நிலை' குறித்து உருகிய அம்மா...!
- நடிகை யாஷிகா ஆனந்த்துக்கு இறுகும் பிடி!.. அடுத்தடுத்து லாக் செய்யும் போலீசார்!.. விபத்தால் தொடரும் விளைவுகள்!!
- VIDEO: யாஷிகா ஆனந்தோட கார் 'ஆக்சிடன்ட்' ஆனது எப்படி...? 'உயிரிழந்த தோழி குறித்த பின்னணி...' - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!
- 'இப்படி போய் குட்டிக்கரணம் போடவா என்ன ஓவர் டேக் பண்ணி போன'.... 'நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்'... வைரலாகும் வீடியோ!