‘என்ன பாய்ஸ் ரெடியா’! சாப்பாடு போட்டியில் ஜெயிச்சா ‘Royal Enfield’ பைக் பரிசு.. அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட ஹோட்டல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சாப்பாடு போட்டியில் வெற்றி பெற்றால் ராயல் என்ஃபீல்டு பைக் பரிசாக வழங்கப்படும் என ஹோட்டல் நிர்வாகம் ஒன்று அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

‘என்ன பாய்ஸ் ரெடியா’! சாப்பாடு போட்டியில் ஜெயிச்சா ‘Royal Enfield’ பைக் பரிசு.. அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட ஹோட்டல்..!

புனே, வாட்கான் மாவல் பகுதியில் ‘சிவ்ராஜ் ஹோட்டல்’ என்ற உணவகம் அமைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்து, இந்த உணவகத்துக்கு வாடிக்கையாளர்களின் வருகை குறைந்துள்ளது. இதனால் உணவகம் மிகவும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டு இருந்துள்ளது. இதனை சமாளிக்க உணவகத்தின் உரிமையாளரான அதுல் வைகர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Hotel offers Royal Enfield bike if you can finish 4kg thali in 60 mins

அதில், சாப்பாடு போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். அதன்படி ரூ.2,500 மதிப்புள்ள 4 கிலோ அசைவ உணவுகளை 60 நிமிடங்களில் சாப்பிட்டு முடிக்க வேண்டும். இந்த போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1.56 லட்சம் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்டு பைக் பரிசாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Hotel offers Royal Enfield bike if you can finish 4kg thali in 60 mins

இதுகுறித்த அறிவிப்பு பலகையை உணவகத்தின் முன்னால் மாட்டியுள்ளார். இதைப் பார்த்த மக்கள் பலரும் போட்டியில் கலந்துகொள்ள தினமும் வருகை தருவதாக உணவக உரிமையாளர் அதுல் வைகர் தெரிவித்துள்ளார். இதற்காக கடைக்கு முன்னால் 5 புதிய ராயல் என்ஃபீல்டு பைக்குகளை அவர் நிறுத்தி வைத்துள்ளார்.

மேலும் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் பகுதியைச் சேர்ந்த சோமந்த் பவர் என்பவர்  இப்போட்டியில் கலந்துக்கொண்டு, 60 நிமிடங்களுக்கு முன்னரே உணவுகள் அனைத்து சாப்பிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு புதிய ராயல் என்ஃபீல்டு பைக் கொடுக்கப்பட்டுள்ளதாக அதுல் வைகர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உணவகங்களை தேடி தேடி சாப்பிட்டு வரும் தங்களது Foodie நண்பர்களுக்கு பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்