'அம்மா, அந்த கல்லை கொஞ்சம் விலக்குங்க'... 'ஐயோ, என் உயிரே போச்சு'... 'வீடியோ எடுத்தவர் கண்ட காட்சி'... நெஞ்சை நிலைகுலைய வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

என்னடா வாழ்க்கை இது எனச் சலித்துக் கொள்பவர்கள், தன்னை விடவும் துன்பத்தில் இருப்பவர்களைக் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் நிச்சயம் அதுபோன்ற எண்ணம் அவர்களுக்கு வராது. அப்படி ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்திக் குறிப்பு.

தெலங்கானா மாநிலம், மஹாபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பாலநகர் மண்டல் என்ற பகுதியைச் சேர்ந்தவர், சுஜாதா. தினமும் கூலி வேலைக்குச் சென்றால் தான் இவருக்குச் சாப்பாடு. சுஜாதாவின் கணவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், தனி ஒரு ஆளாக நின்று தனது குடும்பத்தை அவர் கவனித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, தெலங்கானா மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக, சுஜாதாவின் வீடு இடிந்து விழுந்தது. ஏற்கனவே பெரும் கஷ்டத்திலிருந்த சுஜாதாவிற்கு இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

வீட்டை இழந்த சுஜாதா அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில், தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியாருடன், தஞ்சம் அடைந்தார். ஆனால் மழை ஓய்ந்து நிலைமை சரியான பின்னர் சமுதாயக் கூடத்தில் உள்ளவர்கள் சுஜாதா மற்றும் அவரது குடும்பத்தினரை வெளியேறச் சொல்லியுள்ளார்கள். அங்கிருந்து வெளியேறிய சுஜாதாவிற்கு எங்குச் செல்வது எனத் தெரியவில்லை.

குழந்தைகள் மற்றும் வயதான மாமியாரை வைத்துக் கொண்டு நடு ரோட்டில் நின்ற சுஜாதா, அதே பகுதியில், அரசு கட்டிய பொது கழிப்பறையில் தஞ்சம் அடைந்தார். தற்போது இரண்டு ஆண்டுகளாக அங்கு வசித்து வரும் அவர், மலம் கழிக்கும் பகுதியைக் கடப்பா கல் வைத்து மறைத்து வைத்துள்ளார். மேலும், அந்த கழிப்பறையில் சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர், அடுப்பு போன்ற பொருட்களையும் வைத்துள்ளார்.

இதுகுறித்து கண்ணீர் மல்கப் பேசிய சுஜாதா, ''தினமும் நானும் எனது மாமியாரும் கழிப்பறைக்கு வெளியே தான் தூங்குவோம். எனது இரண்டு பிள்ளைகள் மட்டும் உள்ளே தூங்குவார்கள். மழைக் காலம் வந்து விட்டால் எனக்குத் தூங்கா இரவு தான். ஏதாவது மேற்கூரையின் கீழே அமர்ந்து கொண்டு எனது இரவை கழித்து விடுவேன். குழந்தைகளை மட்டும் படிக்க வைத்து ஆளாக்கி விட்டால் போதும்'' எனக் கூறினார்.

இதனிடையே இந்த செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், பஞ்சாயத்து நிர்வாகம், கழிப்பறைக்கு அருகே, சுஜாதாவுக்கு வீடு கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது. ஆனால் இரண்டு ஆண்டுகளாக ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளோடும், வயதான தனது மாமியாரோடும் ஒரு சிறிய கழிப்பறையில் வசித்து வந்ததை ஒருவர் கூடவா பார்க்காமல் போனார்கள். எத்தனை பேர் அந்த கழிவறையைத் தாண்டி சென்றிருப்பார்கள்.அந்த அளவிற்கு மனித மனம் கல்லாகி விட்டதா? என்பது தான் பலரின் கேள்வியாக உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்