#coupleschallenge 'ஹேஸ்டேக்' மூலம் இந்திய இளைஞர் போட்ட 'போஸ்ட்'... பகிர்ந்து 'ஹாலிவுட்' நடிகை போட்ட 'கமெண்ட்',,.. வைரலாகும் அசத்தல் 'பதிவு'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாசமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு சவால் (challenge) தொடர்பான வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் டிரெண்டிங்கில் இருக்கும்.
இந்நிலையில், தற்போது 'couple challenge' என்ற பெயரில் பலர் ஜோடியாக தங்களது புகைப்படங்களை இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த சவால் தற்போது அதிகம் ட்ரெண்டிங்கில் இருக்கும் நிலையில், #coupleschallenge என்ற ஹேஸ்டேக் பயன்படுத்தி உத்தரப்பிரதேச இளைஞர் ஒருவர் பதிவிட்ட புகைப்படம் அதிகம் வைரலடித்து வருகிறது.
காரணம், அந்த இளைஞர் பதிவிட்ட புகைப்படத்தில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான அலெக்ஸாண்ட்ரா டட்டாரியோ (Alexandra Daddario) என்பவரின் புகைப்படத்தை எடிட் செய்து அவருடன் செல்ஃபி எடுப்பது போல புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இது நெட்டிசன்களிடையே வைரலான நிலையில், அந்த பதிவை நடிகையான அலெக்ஸாண்ட்ரா டட்டாரியோவே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 'இது மிகவும் வேடிக்கையான வார இறுதி' என கமெண்ட் செய்துள்ளார்.
இதனை அந்த இளைஞர் சற்றும் எதிர்பாராத நிலையில், அந்த பதிவின் கீழ், 'நீங்கள் இதனை பகிர்வீர்கள். என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை' என குறிப்பிட்டுள்ளார். அந்த இளைஞரின் #coupleschallenge புகைப்படம் தற்போது இன்னும் அதிகமாக நெட்டிசன்களிடையே பரவலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்