'என்ன தப்பு செஞ்சீங்க'?.. "'இது'க்காக எல்லாம் அவர் மேல போக்சோ பாயாது"!.. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு!.. சமூக வலைதளங்களில்... அனல் பறக்கும் விவாதம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான போக்சோ சட்டம் குறித்து கடந்த சில தினங்களாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன.

"பாதிக்கப்பட்ட மைனரின் கையை குற்றம் சாட்டப்பட்டவர் பிடித்ததற்காகவோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவரின் பேண்ட் ஜிப் திறந்திருந்ததாலோ சம்மந்தப்பட்ட நபரை பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது" என மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிபதி புஷ்பா கனடிவாலா தெரிவித்துள்ளார்.

அண்மையில் சர்ச்சையான தீர்ப்பை பாலியல் வழக்கு ஒன்றில் வழங்கிய நீதிபதி இவர்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கீழவை நீதிமன்ற விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் மீது போக்சோ சட்டம் பிரிவு 8இன் கீழ் தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் விசாரித்து நீதிபதி புஷ்பா குற்றம் சட்டப்பட்டவரின் மீது பாலியல் சீண்டல் தொடர்பான குற்றத்தை நிரூபிக்க இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என தெரிவித்துள்ளார்.

அதோடு பாதிக்கப்பட்ட மைனரின் கையை குற்றம் சாட்டப்பட்டவர் பிடித்ததற்காகவோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவரின் பேண்ட் ஜிப் திறந்திருந்ததாலோ சம்மந்தப்பட்ட நபரை தண்டிக்க முடியாது என சொன்ன நீதிபதி, குற்றம் சட்டப்பட்டவரை கீழவை நீதிமன்றம் கொடுத்திருந்த போக்சோ சட்டம் 8 மற்றும் 10வது பிரிவிலிருந்து விலக்கியதோடு அதே சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் நீதிமன்றம் தண்டித்துள்ளது.

அதோடு சம்மந்தப்பட்ட நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354A(1)(i) பிரிவும் பாய்ந்துள்ளது. இதன் மூலம் அவர் மூன்று ஆண்டுகாலம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதும் தெரிகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்