'ஆம்பள' பையன் 'பொறக்கல'ன்னு கோவத்துல... பொம்பள கொழந்த பொறந்த அன்னைக்கே அத கையில எடுத்து... கோபம் தலைக்கேறி வெறிச்செயலில் ஈடுபட்ட 'கணவர்'... திகைத்து நின்ற 'மனைவி'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் குலை நடுங்க வைக்கும் கொடூரம் ஒன்று அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாச்சல பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் நாஸ்லோ என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதி ஹரிஷ் குமார் - மீனா தேவி. இந்த தம்பதியருக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆன நிலையில், 7 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். திருமணமான நாள் முதல் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் ஹரிஷ். கிட்டத்தட்ட மிருகத்தை போல ஹரிஷ் தனது மனைவிடம் நடந்து கொள்ளும் நிலையில், மீனாவுக்கு சில தினங்களுக்கு முன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
முன்னதாக, தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என ஹரிஷ் உறுதியாக இருந்து வந்த நிலையில், மீனாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கடும் கோபமடைந்த ஹரிஷ், தனக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என கடும் விரக்தியில் இருந்துள்ளார். குழந்தை பிறந்த அன்றே அதனை கையில் எடுத்த ஹரிஷ், தலைகீழாக தூக்கி குழந்தையின் வாய்க்குள் விரலை விட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனைக் கண்ட மீனா, கணவரின் செயலால் கதறித் துடித்துள்ளார்.
அதன் பின் அந்த குழந்தையை அவரே வெளியில் எடுத்து சென்று விட்டு மீண்டும் தனியாக வீட்டிற்கு வந்துள்ளார். அந்த குழந்தையை அடக்கம் செய்து விட்டதாக மீனாவிடம் ஹரிஷ் தெரிவித்துள்ளார். கணவரின் பதிலால் திகைத்து போன மீனா, பதறிப் போன நிலையில், கணவர் மீது போலீசாரிடம் புகாரளித்துள்ளார். ஹரிஷை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கனவில் வந்த மாமியார், மாமனாரால்'... '6 வயது மகளை'... 'பெண் செய்த உறையவைக்கும் காரியம்'... 'வெளிவந்த அதிர்ச்சி வாக்குமூலம்'...
- 'பணம் எடுக்காமலேயே வந்த எஸ்.எம்.எஸ்கள்'... 'ரூ 5 கோடிக்கும் மேல்'... 'சினிமா பாணியில் ஹேக்கர்கள் செய்த காரியத்தால் அதிர்ச்சியில் ஊர்மக்கள்'...
- ‘பிரேத பரிசோதனையின்போது’ அதிர்ந்த மருத்துவர்கள்.. ‘மாட்டிக்கொண்ட பிறகு’ மனைவி கொடுத்த ‘பரபரப்பு’ வாக்குமூலம்!
- 'ஆடல்... பாடல்... கடத்தல்... ஐயோ'!!.. புகழ் பெற்ற பாடகரின் நடுங்கவைக்கும் அந்தரங்கம்!
- VIDEO : "இங்க ஆள் நடமாட்டம் இல்ல"... "அவள போட்டுத்தள்ள இது தான் கரெக்டான 'ஸ்பாட்'"... 'காதலி'யை பிளான் போட்டு 'கொலை' செய்த 'இளைஞர்',,.. கடைசியில் நடந்த 'ட்விஸ்ட்'!!!
- 'சப்பாத்தி தின்ற தந்தை, மகன் மரணம்...' 'விசாரணையில நடந்த டுவிஸ்ட்...' 'திடீர்னு வந்த மந்திரவாதி...' 'கடைசியில போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்...' - உச்சக்கட்ட பயங்கரம்...!
- நடந்த விஷயத்தை அப்பாகிட்ட சொல்லவா...? 'அக்கா, தங்கச்சி 2 பேரையும்...' 'ஆள் அரவம் இல்லாத இடத்துல வச்சு...' 8 பேர் கும்பல் சேர்ந்து செய்த கொடூரம்...!
- 'கொரோனா செக் பண்ணனும்னு அர்த்த ராத்திரியில் நுழைந்த திருடர்கள்...' '8 மாச குழந்தை கழுத்துல கத்தி...' - திக்குமுக்காடி போன குடும்பம்...!
- 5 வயசு 'சிறுமி'ய தனியா கூட்டிட்டு போய்... பாலியல் வன்கொடுமை செஞ்சு... கடைசியில் கல்லாலேயே... 'சிறுவன்' செஞ்ச பதற வைக்கும் 'கொடூரம்'!!
- 'வீட்ல 1 கோடி ரூபாய் இருக்கு...' எப்படி ஆட்டைய போடுறது...? 'காதலனுடன் சேர்ந்து சிறுமி போட்ட மாஸ்டர் ப்ளான்...' - சினிமாவை மிஞ்சிய சம்பவம்...!