"பூணூல் போடுறத தடை செய்வீங்களா?".. ஹிஜாப் விவகாரத்தில் அமீர் எழுப்பிய சரமாரி கேள்விகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம் உள்ளே அனுமதிக்க மறுத்த விவகாரம் உலகம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்த சர்ச்சையினை முன்வைத்து பல்வேறு கோணங்களில் பல்வேறு கருத்துக்களை அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், இயக்குனரும் நடிகருமான அமீர் இந்த ஹிஜாப் விவகாரம் மதவாத சக்திகளால் முன்னெடுக்கப்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

Advertising
>
Advertising

நீங்க தாம்பத்தியத்தில் active- ஆ?.. தப்பா புரிஞ்சுகாதீங்க.. டாக்டர் தந்த முக்கிய அட்வைஸ்..!

போராட்டம்

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதாக பள்ளி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர். ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். "ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித் துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும்" என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத நம்பிக்கை

இந்த விஷயம் குறித்துப் பேசிய அமீர்," குறிப்பிட்ட மத நம்பிக்கையை புறக்கணிக்க போராட்டம் நடத்துவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. ஹிஜாப் அணிவது பெண்களின் உரிமை. அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. நீண்ட காலமாவே மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவு படுத்தும் நோக்கத்தோடு பாஜக செயல்பட்டு வருகிறது" எனக் குற்றம் சாட்டினார்.

மேலும், ஆடை கட்டுபாடுகளுக்கு தடை விதிக்கக்கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் சிலர் பொதுநல மனு ஒன்றினை அளித்திருந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரையில் கல்வி வளாகத்திற்குள் ஹிஜாப், காவி துண்டு உள்ளிட்ட மத ரீதியிலான உடைகளை மாணவ மாணவியர்கள் அணிய கூடாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தனர்.

இதுபற்றி பேசிய அமீர்," மத ரீதியிலான அடையாளங்களை தடை செய்வது என்றால் திருநீர் பூசுவது, குங்குமம் வைத்துக்கொள்வது, சீக்கியர்கள் தலைப்பாகை அணிந்துகொள்வது, ஆடைக்கு உள்ள அணியும் பூணூல் ஆகியவற்றை தடை செய்ய முடியுமா? இது ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட நம்பிக்கை. இதில் யாரும் தலையிட முடியாது" என்றார்.அதேபோல, சில தினங்களுக்கு முன்னர் பிஇஎஸ் கல்லூரிக்கு புர்கா அணிந்து தனியாக மாணவி ஒருவர் வந்தார். அவரைக் கண்டதும் காவித் துண்டு அணிந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள், அவர் முன் நின்று ”ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷம் எழுப்பினர். அப்பெண்ணும் அம்மாணவர்களுக்கு எதிராக ”அல்லாஹு அக்பர்” என்று குரல் எழுப்பியபடி தன் பாதையில் நடந்தார். உடனே கல்லூரி ஊழியர்கள் வந்து அப்பெண்னை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

 

இதுகுறித்து அமீர் பேசுகையில்," அந்தக் கல்லூரியில் படிக்கும் முஸ்கான் என்ற மாணவியைச் சூழ்ந்துகொண்டு காவித் துண்டு அணிந்த மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம்  என கோஷமிட்டிருக்கிறார்கள். அப்போது அந்தப் பெண் அல்லாஹு அக்பர் என முழங்கினார். இதுபற்றி அந்த மாணவி சொல்லும்போது,"அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். அவர்களும் என்னுடைய நண்பர்கள்" என்று சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்த கூட்டத்தில் இருந்து தன்னை இந்து நண்பர்களே காப்பாற்றி அழைத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டார். இதுதான் நம்முடைய நாடு. இந்த ஒற்றுமையையைத்தான் பாஜக சீர்குலைக்கப் பார்க்கிறது" என குற்றம் சாட்டினார்.

மேலும்," மதவாத சக்திகளுக்கு எதிரான இந்த விடுதலைப் போரில் அந்த மாணவி தனது கரத்தை உயர்த்தி கோஷமிட்டது எனக்கு அமெரிக்க சுதந்திர சிலையை ஞாபகப்படுத்தியது" எனக் குறிப்பிட்டார்.

மேலும், வழக்கமாக இம்மாதிரியான சம்பவங்கள் வட மாநிலங்களில் மட்டுமே நடைபெற்று வந்ததாகவும் தற்போது நமது அண்டை மாநிலமான கர்நாடகத்திலும் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது மிகுந்த ஆபத்தான விஷயம் என அமீர் தெரிவித்தார்.

ஹிஜாப் விவகாரம்: கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு..!

HIJAB ISSUE, DIRECTOR AMEER, BJP GOVERNMENT, ஹிஜாப், கர்நாடகா, அமீர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்