ஆஹா.. இந்த ‘மீன்’ கிடைக்குறதெல்லாம் ரொம்ப Rare ஆச்சே.. விலை எவ்ளோ தெரியுமா..? மீனவருக்கு அடிச்ச ஜாக்பாட்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மீனவரின் வலையில் சிக்கிய அரியவகை மீன் லட்சக்கணக்கில் ஏலம் போன சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

வீடு புகுந்து பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற எதிர்வீட்டு வாலிபர்.. சிக்கிய திருநங்கை.. சென்னையில் அதிர்ச்சி..!

வலையில் சிக்கிய அரியவகை மீன்

ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் வழக்கம்போல கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவரது வலையில் அரியவகை கத்தாழை மீன் சிக்கியுள்ளது. உடனே அந்த மீனை கரைக்குக் கொண்டு வந்துள்ளார்.

மருத்துவ குணம்

இந்த தகவல் தெரிந்ததும் அப்பகுதியில் உள்ள மக்கள் கத்தாழை மீனை பார்க்க கூட்டமாக கூடியுள்ளனர். இந்த வகை மீன்கள் கிடைப்பது அரிது என்று சொல்லப்படுகிறது. சுமார் 30 கிலோ எடை கொண்ட இந்த மீன் மருத்துவ குணம் கொண்டது என கூறப்படுகிறது.

அதிக விலைக்கு ஏற்றுமதி

கத்தாழை மீனின் அடிவயிற்றில் உள்ள ‘நெட்டி’ என்றழைக்கப்படும் காற்றுப்பை ஒயின் மற்றும் மருந்து தயாரிப்பில் மூலப்பொருட்களாக பயன்படுவதாக கூறப்படுகிறது. அதனால் இந்த வகையான மீன்கள் வெளிநாடுகளுக்கு அதிக விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மீனால் அடித்த அதிர்ஷ்டம்

இந்த நிலையில் அரியவகை கத்தாழை மீனை மீனவர் ஏலம் விட்டுள்ளார். பலரும் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்க தொடங்கியுள்ளனர். இறுதியாக 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு ஒருவர் இந்த மீனை ஏலத்தில் எடுத்துள்ளார். வலையில் சிக்கிய அரிய வகை கத்தாழை மீனால் மீனவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

VIDEO: பாவங்க மனுசன்.. இப்டி ‘அவுட்’ ஆவோம்னு கொஞ்சம் கூட நெனச்சிருக்க மாட்டாரு.. சோகமாக வெளியேறிய ரிஷப் பந்த்..!

HIGH RATE, KAKINADA, KACHIDI FISH, FISHING HARBOUR, AP, FISHERMAN, அரியவகை மீன், மருத்துவ குணம், மீனவர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்