'நெத்திச் சுட்டி.. ஒட்டியாணம்.. வளையல்'.. எல்லாமே தக்காளிதான்.. சீதனம் கூட!.. வேற லெவலில் 'நக்கலடித்த மணப்பெண்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பாகிஸ்தானில் தங்கத்தின் விலைக்கு நிகராக தக்காளி விலை உயர்ந்துள்ளதால், மணப் பெண் ஒருவர் தங்கத்துக்கு பதிலாக தங்காளியை அணிகலன்களாக அணிந்துள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாகிஸ்தானில், இந்தியா உள்ளிட்ட அந்நிய நாடுகளில் இருந்து, சொந்த நாட்டுக்கு தக்காளி இறகுமதி செய்வதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டில் இருந்து வரும் பொருட்களும்,  பாகிஸ்தானின் நேசநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களும் விலையேறியுள்ளன. குறிப்பாக பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளியின் விலை 300 ரூபாய் என்கிற அதிர்ச்சித் தகவல் அனைவரிடையே பரவலான அதிர்வை ஏற்படுடுத்தியுள்ளது.

இதனை விமர்சிக்கும் வகையில்தான் திருமணத்தின்போது மணப்பெண், தங்க நகைகளை அணிவதற்கு பதிலாக தலை, கழுத்து, கைகளில் தக்காளியை கோர்த்து அணிகலன்களாக சூடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சீதனமாக 3 கூடை தக்காளி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

BRIDE, WEDDING, TOMATO, JEWELLERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்