வாட்சப் செயலியில் பெண்களுக்கான புதிய வசதி.. மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கும் பீரியட் டிராக்கர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெண்களுக்கான ஒரு புதிய வசதி வாட்சாப்பில் இணைந்துள்ளது, பெண்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி தான் பீரியட் டிராக்கர்.
Also Read | "ஒரு மீனோட விலை 13 லட்சமா??.." வாயடைத்து போன நெட்டிசன்கள்.. அப்படி என்ன தான் இருக்கு அதுல??
வாட்சப் உடன் இணைந்து சிரோனா ஹைஜீன் என்கிற நிறுவனம் இந்தியாவின் இந்த முதல் பீரியட் டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்கள் தங்களின் மாதவிடாய் சுழற்சியை இதன் மூலமாகவே கண்காணிக்க முடிகிற வகையில் உருவாகியுள்ள இந்த செயலி, இப்போது நிறையவே பாராட்டுகளையும் கைத்தட்டுகளையும் பெற்று வருகிறது.
பெண்கள் வாட்சப் மூலமாக தங்களது மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்க 9718866644 என்கிற வாட்சப் நம்பருகு முதலில் ஹாய் என்று மெசேஜ் அனுப்ப வேண்டும் என்று தெரிகிறது. இதன் மூலம் வாட்சப் பயனாளிகள் தங்களது மாதவிடாய் கால சுழற்சியைத் தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து இந்த முயற்சியை வாட்சப்புடன் இணைந்து முன்னெடுக்கும் நிறுவனமான சிரோனா ஹைஜீன் நிறுவனத்தின் நிறுவனர் தீச் பஜாஜ் கூறும் போது, “இதில் நாங்கள் எங்கள் பயனர்களுக்கு எளிதாக அணுக கூடிய AI தொழில்நுட்பத்தை வாட்சாப் மூலம் நாங்கள் பயன்படுத்துகிறோம். குறிப்பாக வாட்சாப்புடன் இருக்கும் இந்த பீரியட் டிராக்கர் மூலம் மாதவிடாய், கருத்தரித்தல் மற்றும் கர்ப்பத்தை தவிர்ப்பது போன்ற உள்ளிட்ட பெண்கள் மற்றும் உடல் சார்ந்த சிக்கல்களை சீரிய நோக்கில் கண்காணிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசியவர், “வாட்சப் பயனாளிகள் அல்லது இந்த பீரியட் டிராக்கர் பயானிகள் தங்கள் மாதவிடாய் காலங்கள் மற்றும் தங்களது அண்மை கால விவரங்களை வாட்சப் சாட் பாக்ஸில் உள்ளிடுதல் செய்வர். பின்னர் அந்த பதிவை வைத்துதான் மாதவிடாய் தேதியை நினைவூட்டுதல் மற்றும் வரவிருக்கும் சுழற்சி தேதிகள் பயனர்களுக்கு பகிரப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்