இந்த இக்கட்டான நேரத்துலையும் ‘வேறலெவல்’ பண்ணிட்டீங்க.. திரும்பி பார்க்க வைத்த ‘கேரளா’.. குவியும் பாராட்டு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா பதற்றத்துக்கு மத்தியிலும் கேரளாவில் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற சம்பவத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கொரோனா பரவல் நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 67,152 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,206 பேர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் முன்னிரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கேரளாவில் இதய அறுவை சிகிச்சை நடந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனை ஒன்றில் 50 வயது பெண் ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். கொச்சியை சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக இதய நோயினால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிவு செய்திருந்தார். இதனை அடுத்து திருவனந்தபுரத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணிடமிருந்து பெறப்பட்ட இதயம் ஹெலிகாப்டர் மூலம் 40 நிமிடத்தில் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அப்பெண்ணுக்கு சுமார் 8 மணிநேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது இதய மாற்று சிகிச்சை செய்யப்பட்ட அப்பெண் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பால் மக்கள் அவதிப்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உரிய ஏற்பாடு செய்த கேரள அரசின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்