'39 மனைவிகள், 94 பிள்ளைகள்'... 'உலகின் மிகப்பெரிய குடும்ப தலைவர்'... 'திடீரென வந்த பிரச்சனை'... எதிர்பாராமல் நடந்த துயரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மிசோரமில் 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 33 பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் ஜியோனா சானா .

மிசோரம் தலைநகர் அய்ஸ்வாலில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள பக்டாங் கிராமத்தில் வசித்து வருபவர் ஜியோனா சானா. இவர் தனது 17-வதுவயதில் முதல் திருமணம் செய்தார். பின்னர் அடுத்தடுத்து பல பெண்களை அவர் திருமணம் செய்து கொண்டார். தனது 60-வது வயதில் அவர் கடைசியாக 39-வது மனைவியைத் திருமணம் செய்தார்.

ஜியோனாவுக்கு 94 பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் பலருக்குத் திருமணமாகி 33 பேரக் குழந்தைகள் உள்ளனர். ஒரு கொள்ளு பேரனும் உள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் அனைவரும் 4 அடுக்கு மாடிகள் கொண்ட பிரம்மாண்ட வீட்டில் ஒன்றாக வசிக்கின்றனர். ஜியோனாவின் குடும்பம் உலக அளவில் பிரபலம் என்பதால் உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இதனால் பக்டாங் கிராமம் மிசோரமின் முக்கிய சுற்றுலாத் தலமாக உருவெடுத்தது. இந்நிலையில் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த ஜியோனாவின் வாழ்க்கையில் திடீரென புயல் வீச ஆரம்பித்தது. கடந்த ஆண்டு ஜியோனா நீரழிவு நோய், ரத்த அழுத்தப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையானார். அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வாரம் அவருக்கு மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தலைநகர் அய்ஸ்வாலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் ஜியோனா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மிசோரம் முதல்வர் சோரம் தங்கா மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உலகின் மிகப்பெரிய குடும்பத் தலைவராக விளங்கிய ஜியோனாவின் மறைவு அந்த கிராம மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்