‘நாட்டிலேயே அதிக நன்கொடை’.. HCL நிறுவனர் ஷிவ் நாடார் முதலிடம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய தொழில் அதிபர்கள் நன்கொடை வழங்குவதில் ஹெச்.சி.எல் (HCL) நிறுவனர் ஷிவ் நாடார் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

கம்பெனிகள் சட்டத்தின்படி நிறுவனங்கள் தங்களது வருவாயில் 2 சதவீதத்தை சமூக மேம்பாட்டுக்காக செலவிட வேண்டும். அதன் அடிப்படையில் ஒவ்வொரு நிறுவனங்களும் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு அதிக அளவிலான நன்கொடை வழங்கியதில் ஹெச்.சி.எல் நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த நிறுவனம் ரூ.826 கோடி ரூபாயில் சமூக பணிகளை மேற்கொண்டுள்ளது.

இதனை அடுத்து ரூ.453 கோடி ரூபாயை வழங்கி விப்ரோ (Wipro) தலைவர் ஆஷிம் பிரேம்ஜி (Azim Premji) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் நாட்டின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி (நன்கொடை ரூ.402 கோடி) உள்ளார். இதில் முதல் இடத்தை பிடித்த ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் கடந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

HCL, PHILANTHROPY, SHIVNADA, MUKESHAMBANI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்