ராஜினாமா செய்தார் ஷிவ் நாடார்!.. HCL நிறுவனத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள்!.. என்ன நடக்கிறது?
முகப்பு > செய்திகள் > இந்தியா HCL நிர்வாக இயக்குநராக இருந்த ஷிவ் நாடார் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். உடனடியாக இவரது ராஜினாமா அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1976ம் ஆண்டு தனது நண்பர்களுடன் ஷிவ் நாடார் இந்த நிறுவனத்தை தொடங்கினார். 45 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக இந்த நிறுவனத்தை நடத்தி வந்தார். தொழில்நுட்பத்துறையில் பல முன்னெடுப்புகளை HCL செய்திருக்கிறது.
நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்க்கு (NSE) தேவையான மென்பொருளை HCL வடிவமைத்தது. தற்போது இந்தியாவின் மூன்றாவது பெரிய மென்பொருள் நிறுவனமாக HCL திகழ்கிறது.
HCL நிறுவனத்தில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட பங்குகளை ஷிவ் நாடார் வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி IBM நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி வனிதா நாராயணன் HCL இயக்குநர் குழுவில் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் தான், HCL நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (Managing Director) பொறுப்பில் இருந்து ஷிவ் நாடார் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஷிவ் நாடார் பதவி விலகலை தொடர்ந்து தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி (CEO) விஜயகுமார் நிர்வாக இயக்குநராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 20-ம் தேதி முதல் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நிர்வாக இயக்குநர் பொறுப்பில் விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டே நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ஷிவ் நாடார் விலகினார். அந்த பொறுப்பில் கடந்த ஓர் ஆண்டாக இவரின் மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டாலும், HCL நிறுவனத்தில் இயக்குநர் குழுவின் ஆலோசகராக ஷிவ் நாடார் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பிரபல' ஐடி நிறுவனங்கள் வெளியிட்ட 'வேற லெவல்' அறிவிப்பு...! மனசே குளிர்ந்து போச்சு...! - உற்சாகத்தில் ஐடி ஊழியர்கள்...!
- ஐடி இண்டஸ்ட்ரில '30 லட்சம்' பேர 'வேலைய' விட்டு தூக்க போறாங்களா...? 'வெளியான பரபரப்பு தகவல்...' - விளக்கம் அளித்த நாஸ்காம்...!
- வொர்க் ஃப்ரம் ஹோம்ல இருக்கீங்களா...? 'இன்கம் டேக்ஸ் கட்டுறப்போ...' - கவனிக்க வேண்டிய முக்கியமான விதிமுறைகள்...!
- 'என்ன தான் அமெரிக்கால போய் லட்சக்கணக்கா சம்பாதிச்சாலும்...' 'வாழ்க்கையில ஒரு நிறைவு இல்ல...' ஐ.டி இஞ்சினியர் எடுத்த 'அந்த' முடிவு...! - இப்போ ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா...?
- 'செப்டம்பர்ல மட்டும் தான் இனி ஆஃபிஸ் இருக்கும்'!.. பிரபல ஐடி நிறுவனம் அதிரடி!.. ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிஇஓ!
- வேற வழி இல்ல...! இந்த 'முடிவுகளை' இப்போதைக்கு எடுத்து தான் ஆகணும்...! - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட HCL நிறுவனம்...!
- 'இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்'... 'தமிழ் வழியில் படிப்பு'... 'வாரி வழங்குவதில் வள்ளல்'... ஏலேய் 3வது இடத்தில் நம்ம தூத்துக்குடிகாரர்!
- சென்னை: தேர்தல் பரப்புரையில் அதிரடி அறிவிப்புகள் வெளியிட்ட முதலமைச்சர்...! மகிழ்ச்சியில் ஐடி ஊழியர்கள்... - விவரம் உள்ளே!
- ‘அப்போ அரசுப் பள்ளி மாணவர்’.. ‘இப்போ ஐடி கம்பெனி ஓனர்’.. திரும்பிப் பார்க்க வச்ச ‘மதுரை’ இளைஞர்..!
- ‘ஊழியர்கள் தான் எங்க சொத்து’!.. ரூ.700 கோடி மதிப்பில் ஸ்பெஷல் ‘போனஸ்’.. பிரபல ‘ஐடி’ நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!