'லிப்ட் இல்லாம மாடி ஏறி வரோம்'... 'அந்த காசையும் எடுத்துக்குறாங்க'... 'அதையும் தாண்டி டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்'?... உயர் நீதிமன்றம் அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாசிலிண்டர் விநியோகம் செய்யும் ஏஜன்சிகள் டெலிவரி செய்யும் தொழிலாளிகளுக்கு உரியக் கட்டணத்தை வழங்காமல் நுகர்வோரிடம் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்க நிர்பந்தப்படுத்துவதாக பல புகார்கள் எழுந்தது.
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் டெலிவரி செய்யக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேஸ் ஏஜென்சிக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை அன்னனூரைச் சேர்ந்த லோகரங்கன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவருடைய மனுவில், ''சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக கேஸ் ஏஜென்சிக்களுக்கு டெலிவரி கட்டணம் வழங்கப்படும் நிலையில், இந்த தொகையை சிலிண்டர்களை டெலிவரி செய்யும் நபர்களுக்கு வழங்காமல், ஏஜென்ஸிக்களே எடுத்துக் கொள்வதாகக் குற்றம் சாட்டி இருந்தார்.
அதேநேரத்தில் டெலிவரிக்காக நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கும்படி, டெலிவரி செய்யும் நபர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்திருந்தார். அந்த வகையில் பொதுமக்களின் பணம் 500 கோடி ரூபாய்க்கு மேல் சுரண்டப்படுவதாகவும், இதைத் தவிர்க்க டெலிவரி செய்யும் நபர்களுக்குச் சீருடை, அடையாள அட்டைகள் வழங்கி அவர்களின் பணியை வரன்முறை செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கானது தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலிண்டர் சப்ளை செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால், அதுகுறித்து புகார் அளிக்க வசதி உள்ளதாகவும், அந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினர். இதற்கிடையே சிலிண்டர் விநியோகம் செய்யும் ஏஜன்சிகள் டெலிவரி செய்யும் தொழிலாளிகளுக்கு உரியக் கட்டணத்தை வழங்காமல், டெலிவரி கட்டணத்தையும் எடுத்துக் கொள்வது பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உயருகிறதா சினிமா டிக்கெட் கட்டணம்'?... 'மதுரை ஐகோர்ட்' கிளை அதிரடி உத்தரவு !
- திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு எதிரான வழக்கு... சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.. தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!!
- இணையம் மூலம்... சட்ட விரோதமாக பார்ப்பவர்களுக்கு செம்ம செக்!.. மாஸ்டர் திரைப்படம் விவகாரத்தில்... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
- விஜய்யின் 'மாஸ்டர்' படம் வெளியாகவிருக்கும் நிலையில்... திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதிப்பது குறித்து... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!
- தியேட்டர்களில் 100% அனுமதி விவகாரம்.. ‘தடை’ கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!
- 'சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை வழக்கு'... 'உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு'... வெளியான முழு தீர்ப்பின் விவரம்!
- 'இந்த' கல்லூரிகளை எல்லாம் திறக்க வேண்டாம்!.. உயர்நீதிமன்றம் அதிரடி!.. என்ன நடந்தது?
- ‘அரியர் தேர்வு ரத்து வழக்கு’.. வீடியோ கான்ஃபரன்சிங்கில் குவிந்த மாணவர்கள்.. சேட் பாக்ஸில் வந்த ‘மெசேஜ்’.. கடுப்பான நீதிபதிகள்..!
- ‘கல்லூரி மாணவர்களின்’... ‘அரியர் தேர்வு விவகாரத்தில்’... ‘உயர்நீதிமன்றத்தில்’... ‘யுஜிசி திட்டவட்டம்’...!!!
- ‘நடிகை அமலா பால் தாக்கல் செய்த கோரிக்கை மனு விவகாரம்!’.. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ‘அதிரடி’ உத்தரவு!